Advertisment

ரோஹித் சர்மாவை புறக்கணிக்கிறதா மும்பை இந்தியன்ஸ்? 

Is Mumbai Indians ignoring Rohit Sharma?

Advertisment

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டிகளில் 20 தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தியாவில் நடக்க இருக்கும் இப்போட்டியில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் பும்ரா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் அணியில் துருவ் ஜுரேல் அறிமுக வீரராக களமிறங்க உள்ளார்.

இதற்கிடையில், இந்திய அணிக்கு டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ரோகித் சர்மா மீண்டும் அறிவிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் போட்டிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது ரோகித் சர்மா ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபாலோயர்களை 10 லட்சத்திற்கு மேல் குறைக்க செய்தது. மேலும், ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி அவமதிப்பதாகவும், இனி அந்த அணியை அணியை சப்போர்ட் செய்யப் போவதில்லை என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மீண்டும் ரோஹித் சர்மாவை புறக்கணிக்கிறதா என்று ரசிகர்கள் கேள்வி கேட்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளது. அதில் இந்திய டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 15 பேர் கொண்ட அணி பட்டியலை தனது பக்கத்தில் பகிர்ந்து இருந்தது.

Advertisment

அதில் கேப்டன் ரோஹித் சர்மா புகைப்படம் இல்லாமல் ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா மற்றும் கே எல் ராகுல் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தது. கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்ட நிலையில், கே எல் ராகுலை முன்னிலைப்படுத்தி ஒரு பதிவை போட்டிருப்பது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடையே கடும் கோபத்தை கிளப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அந்த பதிவில் மும்பை இந்தியன்ஸ் பக்கத்தை அன்ஃபாலோ செய்கிறோம் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால்,ரோஹித் சர்மாவை புறக்கணிக்கிறதா மும்பை இந்தியன்ஸ் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe