Skip to main content

ரோஹித் சர்மாவை புறக்கணிக்கிறதா மும்பை இந்தியன்ஸ்? 

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Is Mumbai Indians ignoring Rohit Sharma?

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டிகளில் 20 தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தியாவில் நடக்க இருக்கும் இப்போட்டியில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட  அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் பும்ரா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் அணியில் துருவ் ஜுரேல் அறிமுக வீரராக களமிறங்க உள்ளார்.

இதற்கிடையில், இந்திய அணிக்கு டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ரோகித் சர்மா மீண்டும் அறிவிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் போட்டிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது ரோகித் சர்மா ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபாலோயர்களை 10 லட்சத்திற்கு மேல் குறைக்க செய்தது. மேலும், ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி அவமதிப்பதாகவும், இனி அந்த அணியை அணியை சப்போர்ட் செய்யப் போவதில்லை என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். 

இந்த நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மீண்டும் ரோஹித் சர்மாவை புறக்கணிக்கிறதா என்று ரசிகர்கள் கேள்வி கேட்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளது. அதில் இந்திய டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 15 பேர் கொண்ட அணி பட்டியலை தனது பக்கத்தில் பகிர்ந்து இருந்தது.

அதில் கேப்டன் ரோஹித் சர்மா புகைப்படம் இல்லாமல் ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா மற்றும் கே எல் ராகுல் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தது. கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்ட நிலையில், கே எல் ராகுலை முன்னிலைப்படுத்தி ஒரு பதிவை போட்டிருப்பது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடையே கடும் கோபத்தை கிளப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அந்த பதிவில் மும்பை இந்தியன்ஸ் பக்கத்தை அன்ஃபாலோ செய்கிறோம் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால், ரோஹித் சர்மாவை புறக்கணிக்கிறதா மும்பை இந்தியன்ஸ் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

உலகக்கோப்பை டி20 அணி இன்று அறிவிப்பு? கீப்பராக இவருக்கே அதிக வாய்ப்பு

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
World Cup T20 team announcement who has more chances as a keeper

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் மேற்கீந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. அதற்கான 15 பேர் கொண்ட பட்டியலை ஒவ்வொரு அணியும் இறுதி செய்யும் தருவாயில் உள்ளன. அதன் ஒரு பகுதியாக நேற்று நியூசிலாந்து கிரிக்கெட் அணி வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அதில் ஐபிஎல்- இல் கலக்கி வரும் போல்ட், மிட்செல், ரச்சின் ரவீந்திரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் டி20 அணி கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்படுவார் என ஏற்கனவே செயலாளர் ஜெய் ஷா அறிவித்த நிலையில், கடந்த சில நாட்களாகவே இந்திய அணி எப்போது தேர்வு செய்யப்படும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்து வந்தது. 

ஐபிஎல்-இல் வீரர்களின் செயல்பாடும் கருத்தில் கொள்ளப்படும் என்கிற ரீதியிலும் தகவல்கள் உலா வந்தது.அதற்கு ஏற்றாற்போல் ஹர்திக் பாண்டியா பவுலிங்கிலும் கவனம் செலுத்த வேண்டும் என் கேப்டன் ரோஹித் விரும்புவதாகக் கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஹைதிக்கும் கடந்த சில ஆட்டஙகளாக தொடர்ந்து பந்து வீசி வருகிறார்.

ரோஹித்துடன் யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கப்போகிறார் என்கிற எதிரபார்ர்ப்பும் எழுந்துள்ளது. ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரும்  இணைந்து ஆடவுள்ளதாகவும் தகவ கசிந்தது. தற்போது ஜெய்ஸ்வால் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

World Cup T20 team announcement who has more chances as a keeper

மேலும் அடுத்த தலைவலியாக விக்கெட் கீப்பர் தேர்வு பார்க்கப்படுகிறது. ரெகுலர் விக்கெட் கீப்பர் பண்ட் ஐபிஎல்-இல் ஆடினாலும் அவருடைய பேட்டிங்கில் ஏற்ற இறக்கங்கள் உள்ளதால், தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் தான் முதல் தேர்வாக பார்க்கப்படுவார் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது. கே.எல்.ராகுல் அடந்த இரண்டு வருடங்களாக டி20 போட்டிகளில் ஆடவில்லையென்றாலும், அவரது அனுபவத்தை கருத்தில் கொண்டு சேர்க்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக ஆடி வருவதால் அவரும் கருத்தில் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை - பெங்களூரு ஐபிஎல் போட்டியின் போது ரோஹித் , தினேஷ் கார்த்திக்கை உலகக்கோப்பை அணி தேர்வு உள்ளது. சிறப்பாக விளையாடு என்று தினேஷ் கார்த்திக்கிடம் கூறியதும் அதற்கு வலு சேர்ப்பது போல் அமைந்துள்ளது.

சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப், சாஹல், பிஷ்னோய் சேர்க்கப்படலாமெனவும் தகவல்கள் உலா வருகிறது. வேகப்பந்து வீச்சில் பும்ரா தவிர்த்து சிராஜ், ஆவேஷ் கான், முகேஷ் குமார், அர்ஸ்தீப் சிங் ஆகியோரது பேரும் பரிசீலனையில் உள்ளதென பேசப்படுகிறது.

இந்நிலையில், ரோஹித், பயிற்சியாளர் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அகார்கர் ஆகியோர் இன்று (ஏப்.30) வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி 15 பேர் கொண்ட பட்டியல் இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

“ரோஹித்துக்கு பிறகு இந்திய அணிக்கு கேப்டனாக இவரே தகுதியானவர்” - ஹர்பஜன் சிங் கருத்து

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

ஐபிஎல் 2024 இன் 38 வது லீக் ஆட்டம் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று (22-04-24) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்த அணியில் புதிதாக துஷாரா, நெகல் வதீரா சேர்க்கப்பட்டனர்.

மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் இஷான் களமிறங்கினர். ரோஹித் 6 ரன்களிலும், இஷான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். பின்னர், வந்த முகமது நபி 23 ரன்கள் அடித்து ஓரளவு கை கொடுக்க, அதன் பிறகு திலக் வர்மாவும், நெகல் வதீராவும் பார்ட்னர்ஷிப் அமைத்து 99 ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் சிறப்பாக வந்து வீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர், 180 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பட்லரும், ஜெயிஸ்வாலும் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய பட்லர் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர், வந்த கேப்டன் சஞ்சு சாம்சனுடன் உடன் இணைந்து ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மும்பை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்த அவர், 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணை நின்ற கேப்டன் சஞ்சு சாம்சங், 38 ரன்கள் எடுத்தார். 18. 4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த ராஜஸ்தான் அணி 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஜெய்ஸ்வாலுக்கு இது ஐ.பி.எல்.லில் இரண்டாவது சதம் ஆகும். இந்த இரண்டு சதங்களும் மும்பை அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 14 புள்ளிகள் பெற்று தர வரிசை பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

இதற்கிடையில், இந்திய உலகக் கோப்பை டி 20 அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். உலகக் கோப்பை டி20 அணிக்கு ரோஹித் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த உலகக் கோப்பை டி20க்குப் பிறகு ரோஹித் டி20 விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இந்திய அணியின் டி20 அணிக்கு யார் கேப்டனாக வருவார் என்ற பேச்சு எழுந்தும் வருகிறது. இடையில் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாக சில போட்டிகளுக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், தற்போது கேப்டனாக அவரின் செயல்பாடுகள் மற்றும் வீரராக அவரின் செயல்பாடுகள் மந்தமாக உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், காயத்தால் அடிக்கடி அவதிப்படுகிறார் என்பதாலும் இந்திய அணிக்கு வேறு கேப்டனை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ யோசிப்பதாக கூறப்படுகிறது.

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த நிலையில், தற்போது இந்திய அணிக்கு அடுத்து யாரை டி20 கேப்டனாக நியமிக்கலாம் என்று ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே பார்ம் என்பது தற்காலிகம் தான். அவரின் திறமை தான் நிரந்தரம். மேலும், இந்திய டி20 அணிக்கு சஞ்சு சாம்சனை நிச்சயம் எடுக்க வேண்டும். மேலும் இந்திய அணிக்கு ரோஹித்துக்குப் பிறகு டி20 அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சனை வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார். இது சரிதான் என்கிற வகையில் ரசிகர்களும் அவருடைய பதிவில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.