Skip to main content

தோனியின் வலை பயிற்சியில் கீப்பிங் பயிற்சி இருக்குமா?

Published on 13/02/2019 | Edited on 13/02/2019

 

 

dd

 

எம்.எஸ்.தோனி உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இந்தியா உருவாக்கிய கிரிக்கெட் வீரர்களில் மிகச்சிறந்த கிரிக்கெட்டர் தோனி என்று சமீபத்தில் கபில் தேவ் குறிப்பிட்டிருந்தார். பொதுவாக 37 வயதாகும் ஒரு வீரரின் உடல்தகுதியை இளம் வயது வீரர்களுடன் ஒப்பிடும்போது இளம் வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால் தோனியின் விஷயத்தில் அவர்தான் அதிலும் டாப். இன்றும் ஒரு இளம் வீரர் போல துடிப்புடனும், வேகமாக ஓடும் திறனுடனும் கலக்கி வருகிறார். 

 

1960-களுக்கு பிறகு ஃபரோக் இஞ்சினியர், கிரண் மோரே, சையத் கிர்மானி, நயன் மோங்கியா உள்ளிட்ட சிலர் மட்டுமே ரெகுலர் விக்கெட் கீப்பர்களாக 5 வருடங்களுக்கு மேல் அணியில் விளையாடி வந்தனர். அணிக்காக எதையும் தியாகம் செய்யும் டிராவிட் நல்ல விக்கெட் கீப்பர் கிடைக்காத காரணத்தால் 1999 முதல் 2004 வரை விக்கெட் கீப்பராகவும் பணியாற்றினார். சமீர் திஹே, விஜய் தாஹியா, தீப் தாஸ் குப்தா, அஜய் ரத்ரா, தினேஷ் கார்த்திக், பார்த்தீவ் படேல் உள்ளிட்ட பலர் உள்ளே வெளியே என மாறி மாறி அணியில் ஆடினாலும் யாருடைய விக்கெட் கீப்பிங்கும் மற்றும் பேட்டிங்கும் அணியின் தேவைக்கு ஏற்றவாறு இல்லை.

 

 

dd

 

நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேடி வந்த இந்திய அணிக்கு உலகின் சிறந்த கேப்டன், பினிஷர், சிறந்த விக்கெட் கீப்பர் உள்ளிட்ட பல தகுதிகளுடன் ஒருவர் கிடைத்தார் என்றால் அது இந்தியாவிற்கு மிகவும் அதிர்ஷ்டமே. விக்கெட் கீப்பிங் மூலம் ஒரு போட்டியில் வெல்ல முடியும் என்று காட்டியவர் எம்.எஸ்.தோனி. இக்கட்டான சூழ்நிலையில் பேட்ஸ்மேன்கள் அசரும் நொடியில் ஸ்டம்பிங் செய்து அணியை பலமுறை வெற்றி பெற வைத்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்து அனைவரையும் திகைக்க வைப்பார்.

 

நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் டிம் செய்ஃபெர்ட் விளையாடும் போது குல்தீப் யாதவ் வீசிய பந்தில் தோனியிடம் ஸ்டம்பிங் ஆனார். 0.099 வினாடியில் ஸ்டம்பிங் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் தோனி. இதற்கு முன்பு உலக சாதனையான 0.08 வினாடியில் ஸ்டம்பிங் செய்ததும் தோனிதான். ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஸ்டம்பிங் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் தோனி. 

 

d

 

 

தோனி இதற்காக தனியாக பயிற்சி எடுப்பாரா? எப்படி பயிற்சி எடுக்கிறார்? என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. இதுவரை வலை பயிற்சியின் போது தோனி கீப்பிங் துறைக்காக தனியாக பயிற்சி செய்வதில்லை. வலைப்பயிற்சியின் போது பேட்டிங், ஸ்பின் பவுலிங், ஃபாஸ்ட் பவுலிங் என பயிற்சிகள் செய்வார். பயிற்சியின் போது கீப்பிங் செய்து பார்த்ததில்லை என்று வர்ணனையாளரும், முன்னாள் இந்திய அணி வீரருமான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். 

 

இதுவரை டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், டி-20 போட்டிகள் என அனைத்திலும் அதிக ஸ்டம்பிங் செய்த வீரர் என்ற பெருமையை தோனி படைத்துள்ளார். தோனிக்கு முன்பு சிறந்த விக்கெட் கீப்பர்கள் என்று கருதப்பட்டவர்கள் கில்கிறிஸ்ட் மற்றும் பவுச்சர். தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் 147 டெஸ்ட் போட்டிகளில் 532 கேட்ச்கள் மற்றும்  23 ஸ்டம்பிங் செய்துள்ளார். 295 ஒருநாள் போட்டிகளில்  402 கேட்ச்கள், 22 ஸ்டம்பிங், 25 டி-20 போட்டிகளில் 18 கேட்ச்கள், 1 ஸ்டம்பிங் செய்துள்ளார். 

 

இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் குமார் சங்ககாரா 134 டெஸ்ட் போட்டிகளில் 131 கேட்ச்கள், 20 ஸ்டம்பிங் செய்துள்ளார். 404 ஒருநாள் போட்டிகளில் 383 கேட்ச்கள், 99 ஸ்டம்பிங் மற்றும் 56 டி-20 போட்டிகளில் 26 கேட்ச்கள், 19 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

 

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் 96 டெஸ்ட் போட்டிகளில் 379 கேட்ச்கள், 37 ஸ்டம்பிங் செய்துள்ளார். 287 ஒருநாள் போட்டிகளில் 417 கேட்ச்கள், 55 ஸ்டம்பிங் மற்றும் 13 டி-20 போட்டிகளில் 17 கேட்ச்கள் பிடித்துள்ளார்.

 

எம்.எஸ்.தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் 256 கேட்ச்கள், 38 ஸ்டம்பிங் செய்துள்ளார். 338 ஒருநாள் போட்டிகளில் 311 கேட்ச்கள், 119 ஸ்டம்பிங் மற்றும் 96 டி-20 போட்டிகளில் 56 கேட்ச்கள், 34 ஸ்டம்பிங் செய்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்து யாரும் எட்ட முடியாத இடத்தில் அசத்தும் தோனியின் பிராக்டிஸ் ரகசியம் வியப்பை ஏற்படுத்துகிறது. 

 

 

 

 

 

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 

Next Story

அவமதிப்பு வழக்கு; எம்.எஸ்.தோனிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Supreme Court orders MS Dhoni for Contempt case

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டம் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் விசாரணை நடத்திய நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்த தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐபிஎஸ் அதிகாரி, அங்கும் தோனி மீது அதே குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இதில் தன்னுடைய பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதாகக் கிரிக்கெட் வீரர் தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை அளித்து உத்தரவிட்டனர். அப்போது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சம்பத்குமார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள், மேல்முறையீடு செய்ய வசதியாகத் தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், சம்பத்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த மனு தொடர்பாக கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பத்குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறைத் தண்டனைக்கும் தடை விதித்துள்ளது.