தோனியின் பெற்றோர் மருத்துவமனையில் அனுமதி!

msd with parents

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் தாய், தந்தை இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்துஅவர்கள் இருவரும் ஜார்கண்டிலுள்ளமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தோனியின் பெற்றோர் உடல்நலன் குறித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில், அவர்கள் இருவருக்கும் ஆக்சிஜன் அளவு நிலையாக உள்ளதாகவும், அவர்கள் இருவரும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona virus MS Dhoni
இதையும் படியுங்கள்
Subscribe