Advertisment

தோனி ஸிவா என்னென்ன மொழிகளில் பேசினார்கள் தெரியுமா?

12வது ஐபிஎல் தொடர் கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கியது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. இப்போட்டியில் ஆர்சிபி அணி 70 ரன்களிலேயே ஆட்டமிழக்க, அடுத்து விளையாடிய சிஎஸ்கே மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி வாகை சூடியது.

Advertisment

dhoni ziva

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சனிக்கிழமை முழுவதும் தோனிதான் சமூக வலைதளம் முழுவதும் பேச்சு என்றால் அடுத்த நாள் அவரது மகள் ஸிவாதான் சமூக வலைதளம் முழுவதும் பேசப்பட்டார். ஐபிஎல் வந்துவிட்டாலே தோனி வைரலாவதைவிட அவரது மகள் ஸிவாவும் வேறு லெவலுக்கு வைரலாவார். ஸிவா எது செய்தாலும் அது வீடியோவாக வெளிவந்து செம வைரலாகும். தோனிக்கு எவ்வளவு ஃபாலோவர்ஸுகள் இருக்கிறார்களோ அதற்கு இணையாக ஸிவாவுக்கும் சமூக வலைதள பக்கங்களில் ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள். கடந்த ஐபிஎல் தொடரில் அப்படிதான் ஸிவா என்ன செய்தாலும் வீடியோவாக வெளியாகி செம வைரலானது.

இந்த வருடமும் அது தொடங்கியுள்ளது. தோனி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஸிவாவின் வீடியோ நேற்று சமூக வலைதளம் முழுவதும் வைரலாகியுள்ளது. ‘எப்படி இருக்கீங்க’ என்று தோனி ஆறு மொழிகளில் கேட்கிறார். அதற்கு ஏற்றார்போல ஸிவா அந்த அந்த மொழிகளில் பதில் சொல்கிறார். தமிழில் ‘எப்படி இருக்கீங்க’ என்று தோனி கேட்க அதற்கு ஸிவா, ‘நல்லா இருக்கேன்’ என்று தன்னுடைய மழலை மொழியில் பதில் சொல்கிறார். அடுத்து வங்காளம், குஜராத்தி, போஜ்புரி, பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் எப்படி இருக்கீங்க என்று தோனி கேட்க, ஸிவா தகுந்த மொழிகளில் பதிலளித்தார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இறுதியாக தோனி ‘இன்ஷா அல்லாஹ்’ என்று சொல்ல ‘மாஷா அல்லாஹ்’ என்று ஸிவா பதிலளித்தார். தற்போது இந்த வீடியோவை மஹேந்திர சிங்கின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளது செம வைரலாகியுள்ளது.

CSK IPL ipl 2019 ziva MS Dhoni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe