உலகக்கோப்பையில் இன்றைய போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதும் நிலையில், வங்கதேச அணியின் கேப்டன் மோர்டஸா செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

mortaza press meet before the match against india

வங்கதேசத்தில் ஆளும் கட்சி எம்.பி யாக உள்ள மோர்டஸாவிடம் இன்னும் சில ஆண்டுகளில் நீங்கள் பிரதமர் ஆக வாய்ப்புள்ளதா என கேட்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், பின்னர் சிரித்தபடியே, "ஏன், என்னை கொல்ல விரும்பறீங்களா?" என்று கிண்டலாக கேட்டார்.

பின்னர் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களின் எல்லை மீறிய விமர்சனங்கள் குறித்து கேட்கப்பட்டபோது, "வீரர்களாகிய நாங்களும் மனிதர்கள்தான். எல்லை மீறி ரசிகர்கள் வீரர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்வதும், எதிர்கொள்வதும் மிக கடினமானது. இரண்டு நாட்டு அணிகள் மோதும்போது, இரு அணிகளுமே வெற்றி பெறுவதற்காக தான் போராடுவார்கள். ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரவளிக்க வேண்டும். ஆனால் அது கண்ணியமற்றதாகிவிடக் கூடாது’’ என்றார்.