ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் 21-வது காமன்வெல்த் போட்டியில் மணிப்பூரைச் சேர்ந்த சஞ்சனா சானு, 53 கிலோ பளுதூக்கும் போட்டியில்தங்கம் வென்றுள்ளார். இவர்நான்கு வருடத்திற்கு முன்2014-ல் நடந்த கிளாஸ்க்கோ காமன்வெல்த் போட்டியில் 43 கிலோ பளுதூக்கும் போட்டி பிரிவில்தங்கம் வென்றார் என்பது குறிப்பிட்ட தக்கது.
மேலும் அர்ஜூனா விருது2017 பட்டியலில் தன் பெயர் இடம் பெறாததால் வருத்தத்திலிருந்தார் சானு. தன்னுடைய இருபதாவது வயதில் 43 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற சானு, அர்ஜூனாவிருது பட்டியலில் தன் பெயர் இடம்பெறாததற்கு பின்,தன் 24 வயதில் தன்னுடைய கனவான ஆஸ்திரேலிய கோல்ட்கோஸ்ட் நகரில் தங்கப்பதக்கம் வெல்லவேண்டும் என்ற கனவைஇந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் நிறைவேற்றியுள்ளார்.
குத்துசண்டை வீரர் மேரிகோம் மற்றும் சரிதா தேவி போன்றவர்களைத்தந்த மணிப்பூர் மாநிலத்தைச்சேர்ந்தவர்தான்சஞ்சனா சானு என்பதும் குறிப்பிடத்தக்கது.