ஐபிஎல் ஏலத்திற்கு 1200 வீரர்கள் பதிவு; ரெய்னா, வார்னரின் அடிப்படை விலை 2 கோடி

ipl auction

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு முந்தைய மெகா ஏலத்தை, பிப்ரவரியில் நடத்தபிசிசிஐ திட்டமிட்டுள்ளது. கரோனாபரவல் காரணமாக இந்த மெகா ஏலத்தின் தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளநிலையில், இந்த மெகா ஏலத்திற்குத் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ள வீரர்களின்பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

மொத்தம் 1,214 வீரர்கள் இந்த ஏலத்திற்குத் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இந்த வீரர்களின் பட்டியலில் ஸ்டோக்ஸ், சாம் கரண், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. அதேபோல் கிறிஸ் கெயில், பெயரும் இடம்பெறவில்லை. இதனால் ஐபிஎல் தொடரில் கெயில் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாகக் கருதப்டுகிறது.

அஸ்வின், சாஹல், இஷான் கிஷான், சுரேஷ் ரெய்னா, வார்னர், டி காக், போல்ட், கம்மின்ஸ், ஜேசன் ராய் ஆகியோர் ஏலத்தில் தங்களது அடிப்படை விலையாக2 கோடி ரூபாயை நிர்ணயித்துள்ளனர். கிறிஸ் லின், வாஷிங்டன் சுந்தர், மோர்கன் நீசம், ஹெட்மயர் ஆகியோர் தங்களது அடிப்படை விலையாக ரூ.1.5 கோடியை நிர்ணயித்துள்ளனர்.கேதார் ஜாதவ், பிரசித் கிருஷ்ணா, டி நடராஜன், மணீஷ் பாண்டே, அஜிங்க்யா ரஹானே, நிதிஷ் ராணா, விருத்திமான் சாஹா, குல்தீப் யாதவ், மார்னஸ் லபுஷேன் ஆகியோர் தங்களது அடைப்படை விலையாக ஒரு கோடி ரூபாயை நிர்ணயித்துள்ளனர்.

IPL
இதையும் படியுங்கள்
Subscribe