ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றை மாற்றி எழுதிய முகமது சிராஜ்!

Mohammed Siraj

13 -ஆவது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய இளம் வீரரான முகமது சிராஜ் நடப்பு ஐ.பி.எல் தொடரில், பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற 39 -ஆவது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில், பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் முகமது சிராஜ், பந்துவீசிய நான்கு ஓவர்களில் இரண்டு ஓவர்களை மெய்டனாக வீசினார். இது, ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையாகப் பதிவாகியுள்ளது.

அதிரடிக்கும், விறுவிறுப்பிற்கும் பெயர் பெற்ற ஐ.பி.எல் தொடரில், ஒரு ஓவர் மெய்டனாக பந்துவீசுவது என்பதே மிகவும் அரிதானது. இரு ஓவர்களை மெய்டனாக வீசி சாதனை படைத்ததையடுத்து, முகமது சிராஜிற்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசிய முகமது சிராஜ், 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

rcb
இதையும் படியுங்கள்
Subscribe