Skip to main content

“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டது. தொடர்ந்து இந்த வருடத்துடன் 12 சீசனை எட்டியுள்ளது ஐபிஎல். இதில் ஐந்து முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றும், மூன்று முறை இறுதி போட்டிக்கு சென்றும் ஒருமுறைக்கூட டைட்டிலை வெல்லாமல் தவித்து வருகிறது அனைத்து ஸ்டார் வீரர்களையும் கொண்டிருக்கும் ஆர்சிபி. கடந்த மூன்று வருடங்களாக மிகவும் மோசமான நிலையிலேயெ விராட் கோலியின் தலைமையில் இருக்கும் ஆர்சிபி அணி உள்ளது. 
 

rcb

 

 

அணியின் நிலைமையை மாற்ற பேட்டிங் கோச்சாக இருந்த கேரி கிறிஸ்டன் மற்றும் பவுலிங் கோச்சாக இருந்த ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கடிச்சும் அணி இயக்குனராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல்13 சீசனை முன்னிட்டு வீரா்கள் பரிமாற்றம் சமீபத்தில் முடிவடைந்தது. ஐபிஎல் அணி நிா்வாகங்கள் தங்களுக்கு தேவையான வீரா்களைப் பரிமாறிக் கொண்டன. மேலும் அணியிலிருந்து விடுவிக்க வேண்டிய வீரர்களின் பட்டியலையும் அணிகள் வெளியிட்டுள்ளன. ஆர்சிபி அணியில் டி வில்லியர்ஸ், மொயீன் அலி என இரு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே தற்போது உள்ளார்கள். 

இந்நிலையில் மொயீன் அலி கூறுகையில், “ஐபிஎல் போட்டியில் நல்ல ஆரம்பம் கிடைக்கவேண்டும். நாங்கள் எப்போதும் நிதானமாகவே வெற்றி பெற ஆரம்பிக்கிறோம். பெங்களூரில் விளையாடும்போது துணிச்சலுடன் விளையாடவேண்டும். அது நல்ல ஆடுகளம். பவுண்டரிகளின் எல்லைக்கோடு சிறிய அளவில் இருக்கும். எப்போதும் ஐபிஎல் ஆட்டங்களின் வெற்றிகளுக்காக விராட் கோலி, டி வில்லியர்ஸையே நம்பியிருக்கக் கூடாது. நானும் இதர வீரர்களும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நன்கு விளையாடவேண்டும் என்று கூறியுள்ளார்.

 

 

Next Story

8 ஆவது ஆண்டாக பெங்களூருக்கு தொடரும் சோகம்; கொல்கத்தா அபார வெற்றி 

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

Tragedy continues for Bangalore for 8th year; Kolkata is a huge success

 

16 ஆவது ஐபிஎல் சீசனின் 36 ஆவது லீக் போட்டி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

 

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 200 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் ராய் 56 ரன்களையும் நிதிஷ் ராணா 48 ரன்களையும் எடுத்தனர். பெங்களூர் அணியில் ஹசரங்கா மற்றும் விஜயகுமார் வைஷாக் தலா 2 விக்கெட்களையும் சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் நிதிஷ் ரானா மொத்தம் 4 சிக்ஸர்களை அடித்தார். இதன் மூலம் கொல்கத்தா அணிக்காக 100 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் நிதிஷ் ரானா இரண்டாவதாக இணைந்துள்ளார். அவர் மொத்தமாக கொல்கத்தா அணிக்காக 101 சிக்ஸர்களை அடித்துள்ளார். முன்னதாக ரஸல் 180 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

 

201 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 179 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 54 ரன்களையும் லோம்ரோர் 34 ரன்களையும் எடுத்தனர். கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்களையும் ரஸல் 2 விக்கெட்களையும் சுயாஸ் சர்மா 2 விக்கெட்களையும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் விராட் கோலி 54 ரன்களை எடுத்தார். இதன் மூலம் கொல்கத்தா அணிக்காக அதிகமாக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் கோலி 3 ஆவது இடத்திற்கு முன்னேறினார். 1075 ரன்களுடன் வார்னர் முதல் இடத்திலும் 1040 ரன்களுடன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும் 860 ரன்களுடன் விராட் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.  

 

இந்த போட்டியில் கொல்கத்தா அணி வென்றதன் மூலம் பெங்களூர் கொல்கத்தா அணிகளுக்கு இடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் 2016 பின் நடந்த 5 போட்டிகளிலும் கொல்கத்தா அணி மட்டுமே வென்றுள்ளது.

 

 

Next Story

பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

Published on 28/04/2021 | Edited on 28/04/2021

 

royal challengers bangalore vs delhi capitals teams ipl match

 

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிபெற்றது.

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று (27/04/2021) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது.

royal challengers bangalore vs delhi capitals teams ipl match

 

அதைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. 

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தரப்பில் அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 75, மேக்ஸ்வெல் 25 ரன்களை எடுத்தனர். அதேபோல், டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 58, ஷிம்ரான் ஹெட்மியர் 53 ரன்களை எடுத்தனர். சிறப்பாக விளையாடிய டி வில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.