pm

இந்த மாதாம் 6 தேதியில் தொடங்கி 13ஆம் தேதி இந்தோனேசியாவிலுள்ள ஜகார்த்தாவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மொத்தம் 72 பதக்கங்களை குவித்தது. இதில் 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் அடங்கும்.

இந்நிலையில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Advertisment

இந்த நிகழ்வுக்கு முன்பாக பாராட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றவர்களுக்கு முறையே மத்திய அரசின் சார்பில் ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம் வீதம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.