இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜூக்கு தமிழ் தெரியாது எனக்கூறிய ரசிகருக்கு தமிழ் மொழியிலேயே ட்வீட் செய்து பதிலடி கொடுத்துள்ளார் மித்தாலி ராஜ்.

Advertisment

mithali raj tweet in tamil

தமிழகத்தின் நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவரது தந்தை, விமானப்படையில் பணியாற்றிய போது, ராஜஸ்தானில் பிறந்தார் மித்தாலி ராஜ். முன்னணி இந்திய கிரிக்கெட் வீராங்கனையான இவரை, தமிழ் தெரியாது என கூறி ரசிகர் ஒரு ட்விட்டரில் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடிபிக்கும் வகையில் தமிழிலேயே பதிலளித்துள்ள மித்தாலி ராஜ், "தமிழ் என் தாய் மொழி. நான் தமிழ் நன்றாக பேசுவேன். தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை. இவை அனைத்தையும் கடந்து ஒரு இந்தியனாக பெருமை கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.