Advertisment

“அகந்தையில் பெரும்பாலான வீரர்களை கேப்டன் கோலி தனக்கு கீழாகவும், அவர்களை எளிதாகவும் நினைக்கிறார்....”-மிட்ச்சல் ஜான்ஸன் 

mitchell jhonson

பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. 146 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. இந்தப் போட்டியின் இடையே கேப்டன் விராட் கோலிக்கும், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கும் இடையே வாய்மொழி வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தை நடுவர் கஃபானே வந்து சமாதானம் செய்து அனுப்பினார். 2-வது இன்னிங்ஸ் முழுவதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்தது.

Advertisment

இந்த 2 வது டெஸ்டில் தோல்வி அடந்த இந்திய அணி மைதானத்தில் இருந்து வெளியேறியபோது கேப்டன் விராத் கோலி, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுடன் நடந்துகொண்ட முறையையும், நடத்தையும் முன்னாள் வீரர் மிட்ச்சல் ஜான்ஸன் கடுமையாக விமர்சித்துள்ளார். இப்போட்டியில் இரு வீரர்களும் வாய்மொழியில் வாக்குவாதத்தில் இறங்கினாலும், எல்லை மீறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ஆஸ்திரேலியாவின் முன்னாள் இடது கை வேகப் பந்து வீச்சாளர் மிட்ஷெல் ஜான்ஸன் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தளத்தில் எழுதியுள்ள கட்டுரையில், “பெர்த் 2-வது டெஸ்ட் போட்டி முடிந்த பின் இரு அணி வீரர்களும் மைதானத்தில் கைகுழுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது கோலியும், பெய்னும் ஒருவருக்கு ஒருவர் மைதானத்தில் வாழ்த்து தெரிவித்துகொண்டனர். ஆனால், பெய்ன் நாகரிகமான முறையில்தான் நடந்துகொண்டு, கோலியைப் பார்த்து சிரித்தார். ஆனால், கோலிதான் நாகரிகமில்லாமல் பெய்னிடம் கைகுலுக்கி முறைத்துப் பார்த்துக் கொண்டு சென்றார். என்னைப் பொறுத்தமட்டில் இது மிகவும் அவமரியாதைக்குரிய விஷயம் ஆகும்.

virat kholi

உலகின் தலைசிறந்த வீரர் என்ற அகந்தையில் பெரும்பாலான வீரர்களை கோலி தனக்கு கீழாகவும், அவர்களை எளிதாகவும் நினைக்கிறார். பெர்த் டெஸ்டில் கோலி புத்தியற்றவர்போல் நடந்து கொண்டார். கோலியின் பேச்சுக்கும், செயலுக்கும் நிறையேவே முரண்பாடு இருக்கிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு முன் அளித்த வாக்குறுதிகளை எதையும் கோலி காப்பாற்றவில்லை. வாக்குறுதியில், கோலியின் பேச்சுக்கும், செயல்பாட்டுக்கும் இடையே முரண்பாடு இருக்கிறது. ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடங்கும் முன் அளித்த வாக்குறுதிகள் எதையும் கோலி காப்பாற்றவில்லை.எந்தவிதமான மோதல்களிலும் ஈடுபடமாட்டோம், கடந்த முறை வந்த விராட் கோலி அல்ல நான், நான் மனதளவில் மாறுபட்டு வந்திருக்கிறேன் என்றார். ஆனால், களத்தில் ஆஸ்திரேலிய கேப்டனுடன் இவ்வாறு நடந்து கொள்கிறார்.

நான் கோலியுடன் பழகியதிலிருந்து, நான் அவரிடம் என்ன புரிந்துகொண்டேன் என்றால், அவர் இன்னும் சிறிதுகூட மாறவில்லை என்பதுதான். கடந்த முறை பயணத்தின்போது எப்படி இருந்தாரோ அதேபோன்றுதான் இப்போதும் இருக்கிறார். இது மிகவும் எனக்கு வேதனையை அளிக்கிறது. இது அவரின் மரியாதையையும் குறைத்துவிட்டது.

பெர்த் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் ஹேண்ட்ஸ்கம்ப் கோலி அடித்த பந்தை கேட்ச் பிடித்தார். ஆனாலும், அவர் களத்தில் இருந்து வெளியே செல்ல மறுத்தார். என்னைப் பொறுத்தவரை மைதானத்தில் உள்ள நடுவர் அவுட் கொடுத்தவுடன் அதை ஏற்றுக்கொண்டு, அங்கிருந்து நகர்ந்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

mitchell jhonson Tim Paine Cricket australia indian cricket virat kohli
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe