Advertisment

'களத்திற்கு திரும்பும் மைக் டைசன்....!' ரசிகர்கள் உற்சாகம்...

mike tyson

Advertisment

பாக்சிங் உலகின் 'நாக்அவுட்' மன்னன் எனப் புகழப்படும் மைக்டைசன் மீண்டும் களத்திற்குள் இறங்க இருக்கிறார்.

செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் குத்துச்சண்டை போட்டியில் ராய் ஜோன்ஸ் உடன் நேரடியாக மோதுகிறார். தற்போது அதற்கான தீவிரபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள மைக்டைசன், "தற்போது உனக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்கின்றனர். என் குழந்தைகள் உட்பட அனைவரும் இதையே கேட்கின்றனர். அவர்களுக்கு என்னுடைய பாக்சிங் பற்றி தெரியாது. நீண்ட நாளுக்குப் பிறகு பயிற்சி செய்வதால் உடல் முழுவதும் வலியை உணரமுடிகிறது. அதையெல்லாம் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு தான் போட்டிக்குத் தயாராகி வருகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

mike tyson
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe