Skip to main content

'களத்திற்கு திரும்பும் மைக் டைசன்....!' ரசிகர்கள் உற்சாகம்...

Published on 31/07/2020 | Edited on 31/07/2020

 

mike tyson

 

பாக்சிங் உலகின் 'நாக்அவுட்' மன்னன் எனப் புகழப்படும் மைக்டைசன் மீண்டும் களத்திற்குள் இறங்க இருக்கிறார்.

 

செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் குத்துச்சண்டை போட்டியில் ராய் ஜோன்ஸ் உடன் நேரடியாக மோதுகிறார். தற்போது அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள மைக்டைசன், "தற்போது உனக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்கின்றனர். என் குழந்தைகள் உட்பட அனைவரும் இதையே கேட்கின்றனர். அவர்களுக்கு என்னுடைய பாக்சிங் பற்றி தெரியாது. நீண்ட நாளுக்குப் பிறகு பயிற்சி செய்வதால் உடல் முழுவதும் வலியை உணரமுடிகிறது. அதையெல்லாம் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு தான் போட்டிக்குத் தயாராகி வருகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Next Story

'ஒரு லயனுக்கும் டைகருக்கும் பிறந்தவன்' - வெளியானது 'லைகர்' ட்ரைலர்

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

 Vijay Deverakonda 'liger' movie trailer released

 

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லைகர்'. இப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களோடு பிரபல குத்துச்சண்டை வீரர் 'மைக் டைசன்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'தர்மா புரொடக்ஷன்' தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் க்ளிம்பஸ் வீடியோ, முதல் பாடல் மற்றும் தீம் பாட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  

 

இந்நிலையில் 'லைகர்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மும்பையில் குடிசை பகுதியில் வாழும் விஜய் தேவரகொண்டா சர்வதேச அளவில் நடக்கும் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொள்கிறார். ஒரு சாதாரண இடத்தில் இருந்து இந்திய அளவில் எவ்வாறு உயர்ந்தார் என்பதை மாஸ், ஆக்ஷன் கலந்து சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ளது இந்த ட்ரைலர். மேலும் இந்த ட்ரைலர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.  

 

 

 

Next Story

இந்தியப் படத்தின் வேலையை முடித்த மைக்டைசன்... வைரலாகும் புகைப்படம்

Published on 02/04/2022 | Edited on 02/04/2022

 

Mike Tyson finishes his work on Indian film ... Photo goes viral

 

'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருப்பவர் 'விஜய் தேவரகொண்டா'. இவர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் 'லைகர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் படமாக்கப்பட்டிருக்கிறது. தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் டப் செய்து பான் இந்தியா படமாக ஆகஸ்ட் 25-ல் வெளியாகவுள்ளது. இப்படத்தினை பூரி ஜெகன்நாத், சர்மீ, கரண் ஜோகர் உள்ளிட்டோர் 'தர்மா ப்ரொடக்ஷன்' பேனரில் தயாரிக்கின்றனர். அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல குத்துச்சண்டை வீரர் 'மைக் டைசன்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.

 

இந்நிலையில் 'லைகர்' படத்தின் டப்பிங்கை குத்துச்சண்டை வீரர் 'மைக் டைசன்' நிறைவு செய்துள்ளார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் மைக் டைசன் பேசும் ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் "என்னிடம் அன்பாக நடந்துகொண்டதற்கு மிக்க நன்றி" என கூறியுள்ளார். அதோடு மைக் டைசன் டப் செய்யும் காட்சியை போஸ்டராக வெளியிட்டுள்ளது படக்குழு. இப்போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.