Michael Vaughan

20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா இருக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனானமைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

Advertisment

அமீரகத்தில் நடைபெற்று வந்த 13-ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதிய இப்போட்டியில், மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5-ஆவது முறையாக கோப்பையை வென்றது. போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனானமைக்கேல் வாகன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ரோகித் ஷர்மா குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில் அவர், "ரோகித் ஷர்மாவே 20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக இருக்க வேண்டும். அணியை திறம்பட வழிநடத்தக்கூடியவர். 20 ஓவர் போட்டிகளில் எப்படி வெல்ல வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரிந்துள்ளது. இது விராட் கோலிக்கும் நெருக்கடியை குறைத்து, களத்தில் வீரராக மட்டுமே செயல்பட வாய்ப்பளிக்கும். உலகம் முழுவதும் உள்ள பல கிரிக்கெட் அணிகளில் இது போன்ற நடைமுறை வெற்றிகரமாக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.