Advertisment

"கடினமான காலகட்டத்தில் இதனை ரசிகர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்" - மும்பை இந்தியன்ஸ்அறிக்கை!

mumbai indians

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் ஐ.பி.எல் போட்டிகளும்நெருங்கி வருகின்றன. ஐ.பி.எல் போட்டிகள் வரும் 9 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், டெல்லி அணி வீரர் அக்ஸர் படேல், பெங்களூர் அணி வீரர் தேவதத் படிக்கல் ஆகியோருக்கு கரோனாஉறுதியானது. மேலும் சென்னை சூப்பர்கிங்ஸ்நிர்வாகி ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இவர்களைதவிர்த்து மும்பை மைதான ஆடுகளப் பராமரிப்பாளர்கள் 8 பேருக்கு கரோனாபாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக் குழுவில் ஒருவருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட்-கீப்பிங் ஆலோசகர் மற்றும் பயிற்சியாளராக இருக்கும் கிரண் மோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கிரண் மோருக்கு கரோனாஅறிகுறி எதுவும் இல்லையென்றும், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் மும்பை இந்தியன்ஸ் அணி அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது. மேலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கிரண் மோரும்தாங்களும்பின்பற்றுவதாகக் கூறியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த கடினமான காலகட்டத்தில், எங்களது ரசிகர்களைப் பாதுகாப்பாக இருக்கவும், கரோனாபாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைநினைவுபடுத்தவும் விரும்புகிறோம்" எனக்கூறியுள்ளது.

corona virus ipl 2021 Mumbai Indians
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe