உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி வழிநடத்தும் அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்திய நிலையில், இன்று இறுதி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜென்டினா. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தியது.
அர்ஜென்டினா மூன்றுக்கு மூன்று (3-3)என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்ததால் பெனால்டி சூட் அவுட்முறைகடைபிடிக்கப்பட்டது. பெனால்டி சூட் அவுட்டில் (4-2) என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி 2, டி மரியா ஒரு கோல் அடித்தனர்.