Advertisment

வற்புறுத்தலின் காரணமாகவே பார்சிலோனா அணியில் தொடருகிறேன் -மெஸ்ஸி

messi

Advertisment

வற்புறுத்தலின் காரணமாகவே பார்சிலோனா அணியில் தான் தொடருவதாக பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி பார்சிலோன கிளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் திடீரென பார்சிலோனா அணியில் இருந்து விலகுவதாக சில வாரங்களுக்கு முன்னால் அறிவித்தார். மெஸ்ஸியின் இம்முடிவானது அவரது ரசிகர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் அதிர்ச்சி அளித்தது. அணிக்குள் ஏற்பட்ட உள்விவகாரம் ஒன்றே மெஸ்ஸியின் இந்த முடிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதனையடுத்து ஏற்கனவே போடப்பட்டுள்ள ஒப்பந்தம் இன்னும் நிறைவடையாததால் பார்சிலோனா அணி மெஸ்ஸியின் இந்த முடிவை ஏற்க மறுத்தது.

இதுகுறித்து விளக்கம் அளித்த மெஸ்ஸி, "எனக்கு மனத்திருப்தி இல்லாததால் அணியில் இருந்து விலகி விட முடிவெடுத்தேன். இதில் சில சட்ட சிக்கல் உள்ளன. நான் நேசித்த ஒரு அணியை நீதிமன்றத்தில் கொண்டு நிறுத்த எனக்கு விருப்பமில்லை. அதனால் அடுத்த சீசன் வரை பார்சிலோனா அணியில் தொடருவேன்" என்றார்.

Advertisment

மெஸ்ஸி பார்சிலோனா அணியுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

messi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe