கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரை ஒருமுறை அணியில் சேர்ந்துவிட்டால் அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவே படாதபாடு பட வேண்டியிருக்கிறது. புதிதாக வரும் வீரர்கள் கொஞ்சம் அதிரடி காட்டினாலே பெஞ்சில் உட்கார வைக்கப்படும் நிலையும்இருக்கிறது. நிலைமை இப்படி இருக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கம்பேக் கொடுத்ததோடு, அதிரடியாக விளையாடி ரசிகர்களின் மனதிலும் இடத்தில் இடம்பிடித்து கெத்துக்காட்டும்நான்கு வீரர்களை இந்த பதிவில் காண்போம்.

ரவீந்திர ஜடேஜா

jaddu

சர் ஜடேஜா என செல்லமாக அழைக்கப்படும் இவர், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றிருக்கிறார். 2017, ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இவர், அதன்பிறகு அணியில் சேர்க்கப்படவே இல்லை. ஆசியக் கோப்பைத் தொடரில் ஹர்தீக் பாண்டியா, எஸ்.என்.தாகூர் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் காயத்தால் வெளியேற, அணியில் மீண்டும் இணைந்தார் ஜட்டு. கம்பேக் கொடுத்த முதல் போட்டியிலேயே அசத்திய இவர், நான்கு விக்கெட் வீழ்த்தி 29 ரன்கள் மட்டுமே கொடுத்ததோடு, ஆட்ட நாயகனாகவும் தேர்வானார். அந்தப் போட்டியில் குல்தீப் யாதவ், சகால் ஆகிய இரு முக்கியமான ஸ்பின்னர்கள் விக்கெட்டே எடுக்காதது குறிப்பிடத்தக்கது.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

Advertisment