Skip to main content

இந்திய அணி இதனால் தான் தோற்றது- மெகபூபா முப்தியின் அசத்தல் கருத்து...

Published on 01/07/2019 | Edited on 01/07/2019

உலகக்கோப்பையில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

 

mehabuba mufti tweet about india loss against england

 

 

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய அந்த அணி இந்திய ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கியது. குல்தீப் மற்றும் சாஹல் ஓவர்களில் 140 ரன்களுக்கு மேல் அடித்து  அதிரடி காட்டியது இங்கிலாந்து அணி. 337 ரன்களை அடித்த அந்த அணி 338 என்ற கடினமான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. இதனையடுத்து ஆடிய இந்திய அணி ரன்கள் எடுக்க திணறிய நிலையில் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய அணியின் இந்த தோல்வியை பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி இந்திய அணியின் தோல்வி குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டில், "இப்படி கூறுவது எனது மூடநம்பிக்கை என்றே கூறுங்கள். ஆனால், இந்திய அணி உலக கோப்பையில் தோல்வி அடைய காரணம் புதிய ஜெர்சிதான்’ என பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

 


 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

விராட் கோலியின் பயோபிக்; பிரபல நடிகர் விருப்பம்

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

Vijay Deverakonda expressed interest acting Virat Kohli's biopic

 

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் பாலிவுட்டில் வந்திருக்கிறது. குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை கதையை வைத்து 'எம்.எஸ்.தோனி: தி அண்டோல்டு ஸ்டோரி',  என்ற பெயரில் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதனை தொடர்ந்து இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக் எப்போது உருவாக்கப்படும் என ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 

இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியை பார்க்க விஜய் தேவரகொண்டா, ஊர்வசி ரவுடேலா உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் வந்திருந்தனர். அப்போது கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் விஜய் தேவரகொண்டாவிடம்  எந்த கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு, “தோனியின் பயோபிக்கில் நடிக்க ஆசை. ஆனால் அதில் சுஷாந்த் சிங் நடித்துவிட்டார். அதனால் விரைவில் விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.