Advertisment

ஸ்டுவர்ட் பின்னியை கிண்டல் செய்த ரசிகர்.... பதிலடி கொடுத்த மயாந்தி லாங்கர்...

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டுவர்ட் பின்னியை கிண்டல் செய்த ரசிகர் ஒருவருக்கு அவரது மனைவி மயாந்தி லாங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisment

mayanti langer reply to troll on stuard binny

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்டுவர்ட் பின்னி நீண்ட காலமாக சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். மோசமான ஆட்டம்மற்றும் பார்ம் அவுட் ஆகிய காரணங்களால் இந்திய அணியில் அவர் சேர்க்கப்படாமலேயேஇருக்கிறார். அவரது மனைவியான மயாந்தி லாங்கர் கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு மீம்கள் வருவதும், பின்னி கிண்டல் செய்யப்படுவதும் தொடர்ந்து அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் பின்னணியை கிண்டல் செய்த ரசிகர் ஒருவருக்கு மயாந்தி லாங்கர் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் மாயந்தி லாங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டியோவில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு கமெண்ட் செய்த ரசிகர், "ஸ்டூவர்ட் பின்னி எங்கே இருக்கிறார்“ என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்திருந்த மற்றொருவர் “மாயந்தி லாங்கரின் பொருட்களை எடுத்து செல்ல உதவுவார்“ என்று கேலியாக பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதற்கு கமெண்ட் செய்த மயாந்தி லாங்கர், "என்னால் எனது பொருட்களை எடுத்து செல்ல முடியும். அவர் தனது சொந்த வாழ்கயைில் பிஸியாக இருக்கிறார். கிரிக்கெட் விளையாடுகிறார். எப்போதும் போல சிறப்பாக உள்ளார். குறிப்பாக அவருக்குத் தெரியாத நபர்கள் பற்றி கருத்து கூறாமல் இருக்கிறார்" என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிலுக்கு பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

team india mayanti langer stuart binny
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe