maxwell's tamil version of marriage invitation goes viral

Advertisment

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின் திருமண பத்திரிக்கை இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான கிளென் மேக்ஸ்வெல் ஐ.பி.எல், பிக் பாஷ், உள்ளிட்ட தொடர்களில் விளையாடி வருகிறார். ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் இவரை ரூ.11 கோடிக்கு தக்கவைத்துக்கொண்டது அந்த அணி. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன் என்பவரைக் காதலித்து வந்தார் கிளென் மேக்ஸ்வெல். ஆஸ்திரேலியாவில் பார்மஸி படித்த வினி ராமனுக்கும் மெக்ஸ்வெல்லுக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது.

இதனையடுத்து இவர்கள் இருவரது திருமணமும் மார்ச் 27 அன்று நடைபெற உள்ளது. வினி ராமன் சென்னையைச் சேர்ந்த தமிழ் பெண் என்பதால், இவர்களது திருமண அழைப்பிதழ் தமிழ் மொழியிலும் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது இந்த அழைப்பிதழ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய வீரர் ஒருவரின் திருமண பத்திரிகை தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளதைப் பாராட்டிவரும் தமிழ் ரசிகர்கள், இவர்களின் திருமணத்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.