Advertisment

மேக்ஸ்வெல் பற்றி தவறாக பேசிய நபர்... கொந்தளித்த வருங்கால மனைவி!

maxwel

மேக்ஸ்வெல் பற்றி தவறாக பேசிய நபரை அவரது வருங்கால மனைவியான வினி ராமன் கண்டித்துள்ளார்.

Advertisment

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். அவருக்கு இந்தாண்டின் தொடக்கத்தில் வினி ராமன் என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆனது. வினி ராமன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். அதன்பிறகு, இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வினி ராமன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து வந்தார். அந்தவகையில், மேக்ஸ்வெல்லுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, கரோனா காலத் தனிமை ஏற்படுத்திய வெறுமை குறித்தும், தற்போது நானும் அமீரகத்தில் இருக்க ஆசைப்படுகிறேன் என்றும் சமீபத்தில் பதிவிட்டார்.

Advertisment

அந்த பதிவிற்கு கீழே ஒரு நபர், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த வெள்ளைக்காரரை கைவிட்டு விடுங்கள். அவருக்காக நீங்கள் பரிதாபப்பட வேண்டாம். ஒரு நல்ல இந்தியரை தேடிப் பிடியுங்கள்என பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த வினி ராமன், என்னிடம் இருந்து பதில் வரவேண்டும் என்பதற்காக நீங்கள் இவ்வாறு பதிவிட்டிருப்பது தெரிகிறது. நான் யாருடைய நிறத்தையும் பார்ப்பதில்லை. ஒருவரது நாடு, இனம் என எது குறித்தும் அறியாமல் என்னால் அன்பு காட்ட முடியும். இது முழுக்க முழுக்க என் விருப்பம் சார்ந்தது. இணையத்தில் உள்ள முகமில்லாத ஒருவரின் கருத்தை அடிப்படியாக வைத்து என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டிய தேவை எனக்கு இல்லை" எனப் பதிவிட்டுள்ளார். வினி ராமனின் இந்த பதிவை மேக்ஸ்வெல் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து, 'உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் வினி ராமன்' எனப் பதிவிட்டுள்ளார்.

Maxwell
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe