Advertisment

கே.எல்.ராகுல் விக்கெட்டை வீழ்த்த வியூகம் வகுத்துக்கொடுத்த மேக்ஸ்வெல்!

kl rahul

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் தொடரையடுத்து, இருபது ஓவர் போட்டித் தொடரும், அதனையடுத்து டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளன.

Advertisment

இந்நிலையில், ஆஸ்திரேலிய இணைய ஊடகம் ஒன்றுக்குப்பேட்டியளித்த மேக்ஸ்வெல், "துப்பாக்கி மாதிரியான வீரர் கே.எல்.ராகுல். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், கே.எல். ராகுல் விக்கெட்டை எப்படி வீழ்த்தலாம் என்று யோசித்திருக்கிறீர்கள் எனஎன்னிடம் கேட்டார்கள். நான் அவரை ரன் அவுட் முறையில் வீழ்த்த முயற்சிக்கலாம் என்று கூறினேன். இந்தத் தொடர் முழுவதும் நாங்கள் இதைத்தான் செய்யப்போகிறோம் என நினைக்கிறன். கே.எல்.ராகுல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் நெருக்கடியான நேரங்களிலும் பொறுமையாகச்செயல்படக்கூடியவர்." எனக்கூறினார்.

Advertisment

கே.எல்.ராகுல் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் இணைந்து ஐ.பி.எல் தொடரில், பஞ்சாப் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Glenn Maxwell KL Rahul
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe