Skip to main content

கே.எல்.ராகுல் விக்கெட்டை வீழ்த்த வியூகம் வகுத்துக்கொடுத்த மேக்ஸ்வெல்!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

kl rahul

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் தொடரையடுத்து, இருபது ஓவர் போட்டித் தொடரும், அதனையடுத்து டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளன.

 

இந்நிலையில், ஆஸ்திரேலிய இணைய ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த மேக்ஸ்வெல், "துப்பாக்கி மாதிரியான வீரர் கே.எல்.ராகுல். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், கே.எல். ராகுல் விக்கெட்டை எப்படி வீழ்த்தலாம் என்று யோசித்திருக்கிறீர்கள் என என்னிடம் கேட்டார்கள். நான் அவரை ரன் அவுட் முறையில் வீழ்த்த முயற்சிக்கலாம் என்று கூறினேன். இந்தத் தொடர் முழுவதும் நாங்கள் இதைத்தான் செய்யப்போகிறோம் என நினைக்கிறன். கே.எல்.ராகுல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் நெருக்கடியான நேரங்களிலும் பொறுமையாகச் செயல்படக்கூடியவர்." எனக் கூறினார்.

 

கே.எல்.ராகுல் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் இணைந்து ஐ.பி.எல் தொடரில், பஞ்சாப் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 
 

 

 

Next Story

வெறுப்பான முறையில் மெசேஜ் அனுப்பியவர்களுக்கு மேக்ஸ்வெல் மனைவி பதிலடி

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

'For those who send hate messages...' - Australia cricketer Maxwell's wife explains

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. நேற்று நடந்த இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா தோற்றதால், அத்தோல்வி ரசிகர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது. இதனால் இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். அதே வேளையில் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டு ஆஸ்திரேலியா அணி வீரரான மேக்ஸ்வெல்லின் மனைவி வினி மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியாவின் வெற்றியை கொண்டாடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதனால், தனக்கு எதிராக ரசிகர்கள் சிலர் வெறுப்புடன் மெசேஜ்களை அனுப்புவதாக வினி மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “வெறுப்புடன் தனிப்பட்ட முறையில் எனக்கு மெசேஜ் அனுப்புபவர்கள் கொஞ்சம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். நான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு ஆதரவாக இருக்க வேண்டிய அதே சமயம், என் குழந்தையின் அப்பாவாக இருக்கும் என் கணவர் விளையாடும் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும். இது சிலருக்குப் புரிவதில்லை. உலகிற்கு எது முக்கியமோ, எது முக்கியமான பிரச்சனைகளோ அதில் கவனம் செலுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

அதிக ரன் குவிப்பு; தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

KL Rahul broke Dhoni's record

 

ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தனது முதல் போட்டியில் விளையாடியது. ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்றது.  நேற்றைய ஆட்டம் இந்திய அணியிடம் இருந்து நழுவி செல்லும் வகையில் தான் தொடக்கத்தில் இருந்தது. 

 

ஏனென்றால், 1.6 ஓவரிலேயே ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் என ஆட்டம் இழந்தனர். இந்த 20 ரன்களுக்கு 3 விக்கெட் சரிவில் இருந்து மீளுமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்க, களத்தில் கே.எல்.ராகுலும், விராட் கோலியும் சற்று நம்பிக்கை தருவது போல இருந்தனர். இதன் பின், இருவரும் கைகோர்த்து நிதானமாக விளையாட இந்திய அணி மெல்ல மெல்ல வெற்றியை நோக்கி பயணித்தது. இதன் முடிவாக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. 

 

இந்த ஆட்டத்தில் விராட் கோலி 85 ரன்களுடன் 6 பவுண்டரிகள் எடுத்தார். கே.எல்.ராகுல் 97 ரன்களுடன் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் என எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து களத்தில் நின்றார். என்னதான் செஞ்சுரியை தவறவிட்டாலும், கே.எல்.ராகுல் ஆட்ட நாயகன் விருதினை பெற்றதோடு அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் பெற்றுள்ளார். அதாவது, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பரில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். 

 

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர் பட்டியலில், முதலிடத்தில் ராகுல் டிராவிட்- 145(இலங்கை எதிரணி), இரண்டாம் இடத்தில் எம்.எஸ்.தோனி - 91(இலங்கை எதிரணி) என இருந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 97 ரன்கள் விளாசியதன் மூலம் தோனியை பின்னுக்குத்தள்ளி கே.எல்.ராகுல் 2 ஆம் இடம்பிடித்துள்ளார்.