இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான மனிஷ் பாண்டே விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/manish.jpg)
30 வயதான இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான மனிஷ் பாண்டே பெங்களூருவை சேர்ந்தவர். இவர், இந்தியாவுக்காக 23 ஒரு நாள் போட்டிகளிலும் 31 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
உதயம் என்.ஹெச். 4’, ’ஒரு கன்னியும் மூணு களவானிகளும்’, ’இந்திரஜித்’ போன்ற தமிழ் படங்களில் நாயகியாக நடித்த ஹர்ஷிதா ஷெட்டியும், இவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், வரும் டிசம்பர் 2 ஆம் தேதி இவர்கள் திருமணம் மும்பையில் நடக்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us