திட்டவில்லை.. தட்டி எழுப்பினார்! - தோனியின் கோபம் குறித்து மணிஷ் பாண்டே

தோனி தன்னைத் திட்டவில்லை, தட்டி எழுப்பினார் என இந்திய அணியின் இளம் வீரர் மணிஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

Manidh

நேற்று முன்தினம் சென்சூரியன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டத்தின் இறுதி ஓவரில் முதல் பந்தை மிட் விக்கெட் திசையில் அடித்தசந்தித்த மணிஷ் பாண்டே ஒரு ரன்கள் மட்டும் எடுத்து நின்றார். ஆனால், இரண்டு ரன்கள் ஓடவேண்டும் என்று நினைத்த தோனி கடுப்பாகி, மணிஷ் பாண்டேவை அழைத்து கவனம் இங்கே இருக்கட்டும் என கடுமையான வார்த்தைகளால் திட்டினார்.

இதுகுறித்து ஆட்டம் முடிந்த பின் பேசிய மணிஷ் பாண்டே, ‘வெளிப்படையாக பேச வேண்டுமானால், அணியில் வாய்ப்புகளுக்காக காத்திருப்பது கடினமாக இருக்கிறது. குறிப்பாக தென் ஆப்பிரிக்க தொடரில் மனச்சஞ்சலம் மிகவும் அதிகம். அணியில் திறனும், அனுபவமும் கொண்ட வீரர்கள் இருக்கும்போது நமக்கான வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டும் என்பது புரிகிறது. 4ஆம் இடத்தில் இறங்கும் வாய்ப்பு கிடைத்தது. சில சமயங்களில் 5ஆம் இடத்தில் இறங்க பணிக்கப்படுகிறேன். ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடவேண்டும். இதைத்தான் முதல் போட்டியில் செய்தேன்; முடியாமல் போனது. தோனி சிறந்த அனுபவமுள்ள வீரர். அவர் என்னைத் தட்டி எழுப்பியிருக்கிறார். நடந்து முடிந்த போட்டியில் தோனி சிறப்பாக ஆடினார். ஆட்டத்தின்கடைசி ஓவர்களில் அவரது ஆக்ரோஷமான விளையாட்டு யாவரும் அறிந்ததே. 170 ரன்கள் எடுத்தால் போதும் என்றே நினைத்தோம். ஆனால், கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்துவிட்டார்’ என்றார்.

Dhoni India South africa cricket ODI Kholi Manish pandey
இதையும் படியுங்கள்
Subscribe