Skip to main content

பாராலிம்பிக்ஸ்: ஒரே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளியை கைப்பற்றிய இந்தியா!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

manish - singhraj

 

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில், இந்தியா தொடர்ந்து பதக்கங்களைக் குவித்துவருகிறது. நேற்று (03.09.2021) மட்டும் இந்தியா ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மூன்று பதங்கங்களை வென்றது.

 

இந்நிலையில், பி4 மிக்ஸ்டு 50 மீட்டர் பிஸ்டல் (எஸ்.எச் 1) பிரிவில், இந்தியாவின் மணீஷ் நர்வால் தங்கம் வென்று சாதித்துள்ளார். அதே பிரிவில் சிங்ராஜ் வெள்ளி வென்றுள்ளார். சிங்ராஜ் ஏற்கனவே 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களை வென்றுள்ளது.

 

 

Next Story

பாராலிம்பிக் நட்சத்திரங்களுக்கு பரிசு அறிவித்த ஹரியானா! - இந்தியாவிற்கு மேலும் ஒரு வெள்ளி உறுதி!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

krishna nagar

 

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில், இந்தியா தொடர்ந்து பதக்கங்களைக் குவித்துவருகிறது. நேற்று (03.09.2021) மட்டும் இந்தியா ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மூன்று பதங்கங்களை வென்றது.

 

இந்நிலையில், பி4 மிக்ஸ்டு 50 மீட்டர் பிஸ்டல் (எஸ்.எச் 1) பிரிவில், இந்தியாவின் மணீஷ் நர்வால் தங்கம் வென்று சாதித்துள்ளார். அதே போட்டியில், ஏற்கனவே 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற சிங்ராஜ் அதானா, வெள்ளி வென்று சாதனை படைத்தார்.

 

மணீஷ் நர்வாலும், சிங்ராஜ் அதானாவும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதனையடுத்து ஹரியானா மாநில அரசு, தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு 6 கோடி ரூபாயையும், வெள்ளி வென்ற சிங்ராஜ் அதானாவிற்கு 4 கோடி ரூபாயையும் பரிசாக அறிவித்துள்ளது.

 

இதற்கிடையே ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் கிருஷ்ணா நாகர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இந்தியாவிற்கு குறைந்தது வெள்ளி பதக்கம் உறுதியாகியுள்ளது.

 


 

Next Story

பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்!

Published on 31/08/2021 | Edited on 31/08/2021

 

Singhraj Adhana

 

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு பதக்கங்களைக் குவித்து வருகிறார்கள்.

 

இந்நிலையில், இன்று நடைபெற்ற 10மீ ஏர் பிஸ்டல் எஸ் எச்1 துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில், இந்திய வீரர் சிங்கராஜ் அதானா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இது இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் இரண்டாவது வெண்கலம் ஆகும்.

 

இந்தியா இந்த பாராஒலிம்பிக்கில் இதுவரை, 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என எட்டு பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.