Advertisment

மணிகா பத்ராவின் நகப்பூச்சால் சர்ச்சை! - ட்விட்டரில் தேசியவாத சண்டை

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மணிகா பத்ராவின் நகப்பூச்சு ட்விட்டரில் மிகப்பெரிய சண்டையை உருவாக்கியுள்ளது.

Advertisment

manika

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 21ஆவது காமன்வெல்த் போட்டிகளின் நான்காம் நாளான நேற்று, மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டிக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த அணி சிறப்பாக ஆடி, நடப்பு சாம்பியனான சிங்கப்பூரை 3 - 1 என்ற கணக்கில் வென்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் மணிகா பத்ராவின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

Advertisment

களத்தில் அவரது ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது என ஒரு தரப்பு கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், இன்னொரு தரப்பு மணிகாவின் கை விரல் நகங்களில் மூவர்ணக்கொடி பூசியிருக்கும் படத்தை க்ளோஸப்பில் எடுத்து வைரலாக்கியது. மணிகாவின் தேசப்பற்று என்று பலர் இதைப் பாராட்டியிருந்தாலும், அதீத தேசியவாதத் தனம் என சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.

ஒருபுறம் மணிகாவின் தேசப்பற்றினை பாராட்டும் விதமாக தொடங்கி, அது தேசம், தேசியவாதம் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் மிகப்பெரிய விவாதமாகவும் மாறியிருக்கிறது.

Common Wealth Manika Batra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe