Skip to main content

மணிகா பத்ராவின் நகப்பூச்சால் சர்ச்சை! - ட்விட்டரில் தேசியவாத சண்டை

Published on 09/04/2018 | Edited on 09/04/2018

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மணிகா பத்ராவின் நகப்பூச்சு ட்விட்டரில் மிகப்பெரிய சண்டையை உருவாக்கியுள்ளது.

 

manika

 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 21ஆவது காமன்வெல்த் போட்டிகளின் நான்காம் நாளான நேற்று, மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டிக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த  அணி சிறப்பாக ஆடி, நடப்பு சாம்பியனான சிங்கப்பூரை 3 - 1 என்ற கணக்கில் வென்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் மணிகா பத்ராவின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. 

 

 

 

 

 

களத்தில் அவரது ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது என ஒரு தரப்பு கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், இன்னொரு தரப்பு மணிகாவின் கை விரல் நகங்களில் மூவர்ணக்கொடி பூசியிருக்கும் படத்தை க்ளோஸப்பில் எடுத்து வைரலாக்கியது. மணிகாவின் தேசப்பற்று என்று பலர் இதைப் பாராட்டியிருந்தாலும், அதீத தேசியவாதத் தனம் என சிலர் விமர்சனமும் செய்துள்ளனர். 

 

ஒருபுறம் மணிகாவின் தேசப்பற்றினை பாராட்டும் விதமாக தொடங்கி, அது தேசம், தேசியவாதம் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் மிகப்பெரிய விவாதமாகவும் மாறியிருக்கிறது. 

Next Story

தங்கம் வென்றார் மீராபாய் சானு-பதக்க ரேஸில் இந்தியா

Published on 30/07/2022 | Edited on 30/07/2022

 

NN

 

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஏற்கனவே இந்தியா இரண்டு பதக்கங்களை பெற்றிருந்த நிலையில் தற்பொழுது மூன்றாவது பதக்கமாக தங்க பதக்கத்தை உறுதி செய்துள்ளது இந்தியா.

 

22ஆவது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இறுதிப் போட்டிகள் நடைபெறக்கூடிய முதல் நாளிலேயே இந்தியா தொடர்ச்சியாக மூன்று பதக்கங்களை உரித்தாக்கியுள்ளது. ஏற்கனவே 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சங்கேத் சர்க்கார் வெள்ளிப் பதக்கமும், 61 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் பிரிவில் 269 கிலோ எடையைத் தூக்கி இந்திய வீரர் குருராஜா வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தார்.

 

இந்நிலையில் மகளிர் 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் 197 கிலோ எடையை தூக்கி மீராபாய் சானு தங்கம் வென்றுள்ளார். இதனால் காமன்வெல்த் 2022 போட்டியில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. மீராய்பாய் சானு ஏற்கனவே 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கமும், 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். அதேபோல் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது. 

 

 

 

Next Story

ஒலிம்பிக் தகுதி சுற்றில் மேட்ச் ஃபிக்சிங் செய்யச் சொன்ன தேசிய பயிற்சியாளர்?  - விசாரிக்கக் குழு அமைத்த டெல்லி உயர்நீதிமன்றம்!   

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

manika batra

 

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றவர் மாணிகா பத்ரா. ஒலிம்பிக் போட்டிகளின்போது இந்திய அணிக்கான பயிற்சியாளரைப் புறக்கணித்தார். போட்டியில் விளையாடியபோது அணியின் பயிற்சியாளரிடமிருந்து எந்த அறிவுரையையும் பெறவில்லை. இது சர்ச்சையைக் கிளப்பியது.

 

தனது தனிப்பட்ட பயிற்சியாளரைப் போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் அனுமதிக்க மறுத்ததற்காகவே, அவர் தேசிய அணியின் பயிற்சியாளரைப் புறக்கணித்ததாகக் கூறப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பாக விளக்கம் கேட்டு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு மாணிகா பத்ராவிற்கு நோட்டீஸ் அனுப்பியது.

 

இந்த நோட்டீஸிற்கு பதிலளித்த மாணிகா பத்ரா, தேசிய அணியின் பயிற்சியாளர் தன்னை மேட்ச் ஃபிக்சிங் செய்ய அழுத்தம் கொடுத்ததாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்தநிலையில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் மாணிகா பத்ரா தேர்வு செய்யப்படவில்லை.

 

இதனையடுத்து மாணிகா பத்ரா, இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு வெளிப்படைத்தன்மையுடன் வீரர்களைத் தேர்வு நடைபெறவில்லை என்றும், தன்னை போன்ற தனிநபர்களைக் கூட்டமைப்பு குறி வைக்கிறது என்றும் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தேசிய அணியின் பயிற்சியாளர் தன்னை ஒலிம்பிக் தகுதி சுற்றில் மேட்ச் ஃபிக்சிங் செய்ய அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  மாணிகா பத்ராவின் குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான விசாரணையை நடத்த உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசு சமர்ப்பித்த அறிக்கையில், மாணிகா பத்ரா மீது தவறு இல்லை என கூறியது. இதனையடுத்து இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு செயல்படும் விதம் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், மாணிகா பத்ராவை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்குமாறு உத்தரவிட்டது.

 

இந்தநிலையில் மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், தேசிய அணியின் பயிற்சியாளர் தன்னை மேட்ச் ஃபிக்சிங் செய்ய அழுத்தம் கொடுத்ததாக மாணிகா பத்ராவின் குற்றச்சாட்டை விசாரிக்க இரண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஒரு விளையாட்டு வீரர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும் குற்றச்சாட்டை விசாரித்து நான்கு வாரங்களில் இடைக்கால அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் அந்த மூவர் குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.