ADVERTISEMENT

இந்தியாவுக்கு கோபப்படாத தோனி சென்னைக்காக கோபப்பட்டுள்ளார்... கிரிக்கெட்டை விட முக்கியமானவர்கள் யாரும் இல்லை...

05:01 PM Apr 15, 2019 | santhoshkumar

“விளையாடுவதற்காக சம்பளம் உங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. வெற்றி பெறுவதற்குத் தான் சம்பளம் உங்களுக்கு வழங்கப்படுகிறது.” என்று எங்களது அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தார்கள் என பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு நடைபெற்ற ஒரு நேர்காணலில் ஸ்டீவ் ஸ்மித் கூறியிருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணங்கள் தான் பந்தை சேதப்படுத்துதல் மாதிரியான தவறுகளுக்கு வித்திடுகிறது. இது போன்ற சர்ச்சைகளுக்கு இந்திய அணி வீரர்கள் பெரும்பாலும் அப்பாற்பட்டவர்கள். ஆனால் அஸ்வின் செய்த மன்கட் அவுட், நல்ல செயல்களுக்கு மட்டுமே உதாரணமாக இருந்துவந்த கூல் கேப்டன் தோனி முதன்முறையாக களத்தில் விதிகளை மீறி மிக ஆக்ரோஷமாக நடந்து கொண்டது போன்றவை கிரிக்கெட்டின் மாண்பை குறைக்கும் வகையில் உள்ளது.

கிரிக்கெட்டில் பக்கா ஜென்டில்மேன் என்ற பெயர் பெற்றவர் தோனி. பல நூற்றுக்கணக்கான நல்ல விஷயங்களையும், கிரிக்கெட்டை மேம்படுத்தும் செயல்களையும் மைதானத்திலும், மைதானத்திற்கு வெளியேயும் செய்தவர் தோனி. உணர்ச்சிவசப்பட்டு சில நிமிடங்கள் தோனி களத்திற்கு சென்று வாக்குவாதம் செய்தது அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறு கரும்புள்ளி.

இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் பல தவறான முடிவுகளை நடுவர்கள் வழங்கியுள்ளனர். இதனால் ஆட்டத்தின் முடிவுகள் கூட மாறியுள்ளது. இதுபோல பல முறை சர்வேதேச போட்டிகளின்போதும் சந்தித்தவர் தோனி. அப்போதெல்லாம் கோபப்படாத தோனி, ஐபிஎல் போட்டிகளின்போது கொஞ்சம் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற அழுத்தம் அவர் மீதுள்ளது என்பதையே காட்டுகிறது.

“வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயம் ஐபிஎல்-லில் இருக்கிறது. இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும்; அல்லது மூட்டையைக்கட்டு; அடுத்த வருடம் வாய்ப்பு இருக்காது.” என்ற சூழ்நிலை இங்கு உள்ளது என முன்னாள் குஜராத் லைன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பயிற்சியாளர் பிராட் ஹாட்ஜ் தெரிவித்திருந்தார். அந்த கூற்றுகள் முற்றிலும் உண்மை என்பதையே தற்போது நடந்துவரும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நோ பால் பற்றி ஜடேஜா மற்றும் சண்ட்னர் இருவரும் நடுவரிடம் விவாதிக்கும் போது தோனி மைதானத்திற்குள் வந்தது தவறான முன்னுதாரணம். இது நடுவரை அவமதிப்பதாக கருதப்படும். நடுவர்கள் முடிவுகளை கேள்விக் கேட்ட தோனியை ஒன்று அல்லது இரண்டு ஆட்டத்தில் தடை செய்யப்பட வேண்டும். இந்திய அணிக்கு இந்த மாதிரியான செயலை செய்திருந்தால் மகிழ்ச்சியடைவேன். இந்திய அணிக்கு விளையாடும் போது தோனியை கோபமாக பார்த்ததில்லை என்று சேவாக் கூறியுள்ளார்.

இது ஒன்றும் கிராமத்தில் விளையாடும் கிரிக்கெட் அல்ல. அல்லது 10 வயது சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு அல்ல. தோனி ஒரு சில நேரங்களில் ஒரு வீரர் என்பதையே மறந்துவிடுகிறார். தோனிஅதிகாரி அல்ல, தோனி ஒரு வீரர் மட்டுமே, தோனி அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாது என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட் கூறியுள்ளார்.

ஐபிஎல்லில் அணிகளின் உரிமையாளர்களிடமிருந்து அதிகளவில் அழுத்தங்கள்வரக்கூடும் என எனக்குத் தெரியும். ஆனால் அஸ்வின் மற்றும் தோனி ஆகியோரின் செயல்பாடுகளால் மிகவும் ஏமாற்றமடைந்தேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்க் வாஹ் கூறியுள்ளார்.

இந்த ஐபிஎல் தொடரில் நடுவர் செயல்பாடுமிகவும் ஏமாற்றமாக உள்ளது. நோ பால் என்று கூறப்பட்ட நிலையில்அந்த முடிவு மாற்றப்படுகிறது. எதிரணியின் கேப்டன் ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர் மீண்டும் மைதானத்திற்குள் வருவது முறையற்ற செயல். தோனி தவறான முன்னுதாரணத்தை கேப்டன்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

நோ பால் என்ற முடிவை திரும்பப் பெறுவதோஅல்லது மைதானத்திற்குள் நடுவர் தரப்படும்எந்த முடிவையும் திரும்பப் பெறுவதற்கு நடுவருக்கு மட்டுமேஉரிமை உள்ளது. ஆனால் தோனி அதை விமர்சித்த முறைதான் ஆச்சர்யமாக உள்ளது என முன்னாள் இந்திய வீரர் ஹேமங்க் பதானி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT