Advertisment

கே.எல். ராகுல் சர்ச்சைக்கு மத்தியில் பஞ்சாப் பயிற்சியாளரை இழுத்த லக்னோ!

ANDY FLOWER

Advertisment

ஐபிஎல் தொடரில் புதிதாக பங்கேற்கவுள்ள இரண்டு அணிகளில் ஒன்றான லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளராகஆண்டி பிளவர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆண்டி பிளவர் பயிற்சியாளராக சர்வதேச அளவில் முத்திரை பதித்தவர். அவர் பயிற்சியாளராக இருந்தபோது இங்கிலாந்து அணி, டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி, தரவரிசையிலும்நம்பர் ஒன் இடத்தில் இருந்துவந்தது.

மேலும்,அவர் பயிற்சியாளராக இருந்தபோதுதான்இங்கிலாந்து அணி தனது முதலாவது ஐசிசி கோப்பையை வென்றது.ஆண்டி பிளவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல்லில் பஞ்சாப் அணியின் உதவி பயிற்சியாளராக இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறுமாறுகே.எல். ராகுலை லக்னோ அணி நிர்வாகம் தூண்டுவதாக, பஞ்சாப் அணி நிர்வாகம் பிசிசிஐயிடம் புகாரளித்துள்ளதாகவும், புகாரைப் பிசிசிஐ விசாரித்துவருவதாகவும் தகவல் வெளியான நிலையில், லக்னோ அணி பஞ்சாப் அணியின் பயிற்சியாளரைத் தங்கள் பக்கம் இழுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe