ADVERTISEMENT

ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் - தோல்வியிலும் சாதித்த லோவ்லினா போர்கோஹெய்ன்!

11:38 AM Aug 04, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பாக பங்கேற்றவர்களில் மீராபாய் சானு பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். பி.வி. சிந்து வெண்கலம் வென்றுள்ளார். மேலும் பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியா சார்பாக பங்கேற்ற அசாமின் லோவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்தார்.

இந்தநிலையில், லோவ்லினா போர்கோஹெய்ன் இன்று (04.08.2021) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், துருக்கியின் புசெனாஸ் சர்மெனேலியிடம் 5 - 0 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இருப்பினும் அரையிறுதி வரை முன்னேறியுள்ளதால் லோவ்லினாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கும்.

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதன் மூலம், மேரி கோம், விஜேந்தர் சிங் ஆகியோருக்குப் பிறகு, ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை லோவ்லினா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT