Advertisment

ஐபிஎல் 2022: லக்னோ அணி ஒப்பந்தம் செய்த மூன்று வீரர்கள் யார் யார்?

ipl

Advertisment

கரோனாபரவல் காரணமாக 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தள்ளிப்போக வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், ஐபிஎல் அணி நிர்வாகங்கள்தங்கள் அணியைக் கட்டமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தாண்டுமுதல் ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் ஏலத்திற்கு முன்னதாகவே மூன்று வீரர்களை ஒப்பந்தம் செய்யலாம் என்பதால், இரு அணிகளும் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்தநிலையில் அகமதாபாத் அணி, ஹர்திக் பாண்டியா மற்றும் ரஷித் கானையும்தலா 15 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், சுப்மன் கில்லை 7 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்தநிலையில்லக்னோ அணி, கே.எல் ராகுலை 15 கோடிக்கும்,மார்கஸ் ஸ்டோனிஸை11 கோடிக்கும், ரவி பிஷ்னோயை4 கோடிக்கும் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.எல். ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாகஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

IPL lucknow
இதையும் படியுங்கள்
Subscribe