ipl 2022

Advertisment

2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரையொட்டி, விரைவில் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் ஐபிஎல் அணிகள், தாங்கள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியலை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டன. இதில் சில முன்னணி வீரர்கள் பல்வேறு காரணங்களுக்காக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், அவ்வாறுவிடுவிக்கப்பட்ட முன்னணி வீரர்களில்சிலரை அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் ஒப்பந்தம் செய்யவுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவல்களின்படி, கே.எல். ராகுல் மற்றும் ரஷித் கானை லக்னோவும், ஹர்திக் பாண்டியாவை அகமதாபாத்தும்ஒப்பந்தம் செய்யவுள்ளது.

அதேபோல் வார்னரை அகமதாபாத் ஒப்பந்தம் செய்யவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அணிகளான அகமதாபாத்தும்லக்னோவும் ஏலத்திற்கு முன்னதாகவே, ஏலத்திற்கு வரும் வீரர்களில் மூவரை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.