Advertisment

கால்பந்தில் மெஸ்ஸி தொடர் ஆதிக்கம்: ஆறாவது முறையாக பலான் டி ஆர் விருது!

'பாலன் டி ஆர்' விருதை ஆறாவது முறையாக வென்று பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸி வரலாற்றுச்சாதனை படைத்துள்ளார்.

Advertisment

LIONEL MESSI

ஃபிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் சார்பில் சிறந்த கால்பந்து வீரருக்கான 'பலான் டி ஆர்' விருது வழங்கும் விழா பாரிஸில் நடைபெற்றது. இந்த விருதினை பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸி ஆறாவது முறையாக பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த முறை இந்த விருதை பெற்ற ரியல் மாட்ரிட் வீரர் லூகா மாட்ரிக், நடப்பு ஆண்டுக்கான பலூன் டி ஆர் விருதை மெஸ்ஸிக்கு வழங்கினார். இதனை மெஸ்ஸின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisment

கால்பந்தில் தொடர்ந்து, தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் மெஸ்ஸி நடப்பு ஆண்டில் மட்டும் ஃபிபாவின் சிறந்த வீரருக்கான விருது, அதிக கோல்கள் அடித்தற்காக வழங்கபடும் கோல்டன் பூட் விருதை ஆறு முறை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பலூன் டி ஆர் விருதை ஆறாவது முறையாக பெற்றதன் மூலம், மிகச் சிறந்த மூன்று விருதுகளையும் தலா ஆறு முறை பெற்ற ஒரே வீரர் என்ற சிறப்பையும் மெஸ்ஸி பெற்றுள்ளார்.

football messi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe