இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட்தொடர், நாளை தொடங்குகிறது. இரு அணிகளும்நாளை பகலிரவு ஆட்டத்தில் மோதவுள்ளனர்.
இந்தநிலையில், ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் ஆலன்பார்டர்இந்தத்தொடர் குறித்துஒரு பேட்டியில் பேசுகையில், பும்ராவைபற்றி பயம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "நான் பும்ராவின் மிகப்பெரிய ரசிகன். நான் அவர் குறித்துகவலைப்படுகிறேன், ஏனென்றால் எங்கள் பிட்ச்களில்கொஞ்சம்பவுன்ஸ்இருக்கும். மேலும், பந்து பக்கவாட்டில்மூவ்ஆகும். கடந்த முறை அவர், சிறப்பாக ஆடி முக்கியமான விக்கெட்டுகளைஎடுத்தால்,இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாய்அவர் இருப்பார்" எனக் கூறியுள்ளார்.
மேலும், "பும்ரா முகத்தில் எப்போதும் சிரிப்பு இருக்கும். ஆனால், பந்துவீச்சு ரிதத்தைப் பெற்றுவிட்டால் மிகவும் ஆபத்தானவராக மாறிவிடுவார்" எனஆலன்பார்டர்கூறியுள்ளார்.
கடந்த இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில், 4 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் எடுத்து, இந்தியா அணிதொடரைவெல்ல முக்கியபங்கு வகித்தார்என்பதுகுறிப்பிடத்தக்கது.