Babar Azam

ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. ஜிம்பாவே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான பாபர் அசாம், 8 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 837 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். இந்திய வீரர்களான விராட் கோலி, 871 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரோகித் ஷர்மா855 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

Advertisment

ரோகித் ஷர்மாவைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடிக்க 18 புள்ளிகளும், விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்க 34 புள்ளிகள் மட்டுமே பாபர் அசாமிற்குத் தேவையென்பதால், இனி அவரவர் இடங்களைத் தக்க வைக்க இவ்வீரர்களிடையே கடும்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment