Advertisment

2020 ஐபிஎல் தொடரிலிருந்து மலிங்கா விலகல்...

malinga

Advertisment

மும்பை அணியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடரானது இந்த மாதம் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் மும்பை அணியின் நட்சத்திர வீரரான லசித் மலிங்கா இத்தொடரில் இருந்து விலகுவதாக மும்பை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக விலகியிருப்பதாக கூறப்படுகிறது. மலிங்காவின் விலகலானது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது. அவருக்கு பதில் ஆஸ்திரேலியா வீரர் ஜேம்ஸ் பட்டின்சன் அணியில் இடம் பெற இருக்கிறார். இதற்கு முன்ரெய்னா சொந்த காரணங்களுக்காக இத்தொடரில் இருந்து விலகினார்என்பது குறிப்பிடத்தக்கது.

lasith malinga
இதையும் படியுங்கள்
Subscribe