kusal mendis arrested in accident case

Advertisment

இலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் சாலை விபத்துத் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான குசால் மெண்டிஸ் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான இவர் நேற்று அதிகாலை தெற்குக் கொழும்புவில் தனது காரில் சென்றுகொண்டிருந்த போது, சைக்கிளில் வந்த 64 வயதான முதியவர் ஒருவரின் மீது காரை இடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த முதியவர் நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்த இரு நாட்களுக்குள் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.