Advertisment

இந்திய வீரருக்கு கரோனா - இலங்கையுடனான இரண்டாவது டி20 ஒத்திவைப்பு!

team india

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. ஏற்கனவே ஒருநாள்தொடரை இந்தியா வென்ற நிலையில், தற்போது 20 ஓவர் போட்டித் தொடர்நடைபெற்றுவருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், இன்று (27.07.2021) இரண்டாவது இருபது ஓவர் போட்டி நடைபெற இருந்தது.

Advertisment

இந்தநிலையில், இந்திய வீரர் க்ருனால் பாண்டியாவிற்குகரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, இன்று நடைபெறுவதாக இருந்த இருபது ஓவர் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை வீரர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

Advertisment

ஒருவேளை இரு அணிகளைச் சேர்ந்த வேறு யாருக்கும் கரோனா உறுதியாகவில்லை என்றால், இன்று நடைபெறவிருந்த இரண்டாவது இருபது ஓவர் போட்டி நாளை நடைபெறும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

krunal pandya corona virus team india
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe