விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட மும்பை அணி வீரர்!

Krunal Pandya

அமீரகத்தில் நடைபெற்று வந்த 13-ஆவது ஐபில் தொடரில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐபிஎல் தொடருக்குப் பின் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் இந்தியவீரர்கள் அமீரகத்தில் இருந்தே ஆஸ்திரேலிய புறப்பட்டுச் சென்றதையடுத்து, பிற வீரர்கள் தங்கள் நாடு திரும்பி வருகின்றனர்.

அந்தவகையில், நேற்று இந்தியா திரும்பிய மும்பை அணி வீரரான குர்னால் பாண்ட்யா மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். விமான நிலையத்தில் நடந்த சோதனையின் போது, அவரிடம் கணக்கில் காட்டப்படாதசில விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் இருந்துள்ளன. இதனையடுத்து வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தற்போது விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இது குறித்து குர்னால் பாண்ட்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

krunal pandya
இதையும் படியுங்கள்
Subscribe