Skip to main content

அன்று டி வில்லியர்ஸ்... இன்று மேக்ஸ்வெல்... தெறிக்கவிடும் குருனல் பாண்டியா...

Published on 27/11/2018 | Edited on 27/11/2018

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் குருனல் பாண்டியாவின் 3-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட 23 ரன்கள் குவித்தார் மேக்ஸ்வெல். அந்த போட்டியில் குருனல் பாண்டியாவின் 4 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்தனர் ஆஸ்திரேலிய அணியினர். இதில் 36 ரன்கள் மேக்ஸ்வெல் எடுத்த ரன்கள். 

 

kk

 

 

சஹாலின் 4 ஓவருக்கு 64 ரன்கள், ஜோகிந்தர் ஷர்மாவின் 4 ஓவருக்கு 57 ரன்கள், ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக டி20-யில் இந்திய பந்து வீச்சாளரின் மோசமான பந்து வீச்சாக அமைந்தது குருனல் பாண்டியாவின் பந்துவீச்சு. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இவரின் பந்துவீச்சை மேக்ஸ்வெல் விளாசித்தள்ள, முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் இவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பேசத் தொடங்கினர்.

.

இரண்டாவது போட்டியில் மேக்ஸ்வெலால் குருனல் பாண்டியாவின் 9 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும் அவரின் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார் மேக்ஸ்வெல். 3-வது போட்டியில் குருனல் பாண்டியாவின் 3 பந்துகளில் மேக்ஸ்வெலால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும், இந்த போட்டியிலும் அவரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

 


முதல் போட்டியில் விக்கெட் எதுவும் எடுக்காத குருனல் பாண்டியா அடுத்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 5 விக்கெட்கள் எடுத்தார். மூன்றாவது போட்டியில் மட்டும் 4 விக்கெட்கள் எடுத்தார். இது டி20-யில் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு ஸ்பின் பவுலரின் சிறந்த பந்து வீச்சாகும். இதன் மூலம் தன்னை விமர்சித்த விமர்சகர்களுக்கு அடுத்து வந்த இரண்டு போட்டிகளிலும் தக்க பதிலடி கொடுத்தார் குருனல் பாண்டியா.

 

மேக்ஸ்வெல் மட்டுமல்ல. உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக கருதப்பட்ட ஏ பி டி வில்லியர்ஸ் கூட குருனல் பாண்டியாவின் பந்துவீச்சில் தொடர்ந்து அவுட் ஆகியுள்ளார். டி வில்லியர்ஸ் இதுவரை ஐ.பி.எல். போட்டிகளில் 4 முறை குருனல் பாண்டியாவின் பந்துவீச்சை சந்தித்துள்ளார். அந்த 4 முறையும் அவரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்துள்ளார். டி வில்லியர்ஸ்க்கு எதிராக குருனல் பாண்டியாவின் பந்துவீச்சு சராசரி 8 என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இன்று இந்தியா கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக கருதப்படுபவர் ஹர்திக் பாண்டியா. இவரின் மூத்த சகோதரர்தான் குருனல் பாண்டியா. இருவரும் ஐ.பி.எல்.-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமானார் குருனால் பாண்டியா. 

 

kk

 

 

2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல்.-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடினார். இதனால் 2018 ஐ.பி.எல். ஏலத்தில் 8.8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஐ.பி.எல்.-ல் ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக பிரமிக்க வைக்கும் புள்ளிவிவரங்களை கொண்டுள்ளார்  குருனல் பாண்டியா. 33 இன்னிங்க்ஸ் ஆடி 708 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 31, ஸ்ட்ரைக் ரேட் 154. 10 முறை நாட் அவுட் பேட்ஸ்மேன். 28 விக்கெட்களையும் எடுத்துள்ளார். பவுலிங் சராசரி 28, எக்னாமி ரேட் 7. இதில் 13 விக்கெட்கள் டாப் ஆர்டர், 11 விக்கெட்கள் மிடில் ஆர்டர் என்பது கவனிக்கத்தக்கது. 

 

குருனல் பாண்டியாவை பொறுத்தவரை அணிக்கு பல வகைகளில் பலம் சேர்ப்பார். மிக சிறந்த பீல்டர். பேட்டிங்கில் அதிரடியாக ஆடக்கூடியவர். அதே சமயம் தேவைக்கு ஏற்ப, நிதானமாகவும் ஆடும் திறன் கொண்டவர். பவர்ப்ளே ஓவர்களிலும் பந்துவீசும் வல்லமை படைத்தவர். சஹால் மற்றும் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். இந்திய அணிக்கு ஆல்-ரவுண்டர்கள் தான் தேவை. ஹர்திக் பாண்டியா வேகபந்து வீச்சு ஆல்-ரவுண்டராக உள்ளார். இந்த நிலையில் குருனல் பாண்டியா ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றால், அணியின் பலம் கூடும். இவர் இந்திய அணியில் இனிவரும் காலங்களில் முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கலாம். 

 


 

Next Story

மும்பை அணியை துவம்சம் செய்து வரலாற்று சாதனை படைத்த சன் ரைசர்ஸ்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
mi vs srh ipl live score update sun risers creates history record in ipl

ஐபிஎல் 2024 இன் 8ஆவது லீக் ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். மற்றொரு தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்த ஹெட் தொடர்ந்து தனது அதிரடியை காட்டினார். 18 பந்துகளில் அரை சதத்தை கடந்த ஹெட் மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை நாலாபக்கமும் சிதறடித்தார்.  அவருடன் இணைந்த அபிஷேக் ஷர்மா ஹெட்டை மிஞ்சும் அளவுக்கு அதிரடியில் கலக்கி 7 சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

பின்னர் மார்க்ரம் மற்றும் கிளாசன் இணைந்தனர். அவர்களும் மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.  கிளாசனும் தன் பங்கிற்கு 7  சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன்  34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். மார்க்ரம் 28 பந்துகளில்  42 ரன்கள் எடுத்தார். இறுதியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு கிறிஸ் கெயில் 175 ரன்கள் குவித்த  அந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட 263 ரன்களே சாதனையாக இருந்து வந்தது. தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அந்த சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி  களமிறங்கி 2 ஓவர்கள் முடிவில் 27 ரன்கள் எடுத்துள்ளது.

Next Story

தொடங்கியது '2024 தேர்தல் திருவிழா'- தேதிகள் அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'2024 Election Festival' begins- dates announced

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சந்து ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்று கொண்டனர். அதே நேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. தொடர்ந்து தேர்தல் தேதி பற்றி முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று (16/03/2024) பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதன்படி இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உரையாற்றுகையில், ''மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழுமையாக தயாராகி உள்ளது. 2024-ல் மட்டும் 60 நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த உலகிற்கே இது தேர்தல் ஆண்டு. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த தேர்தலில் மொத்தமாக 986.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை விட 6 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

சுமார் 20 கோடி இளம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 1.50 கோடி பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. நூறு வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆள்பலம், பணபலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகிய நான்கும் தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக உள்ளது. நான்கு பலத்தை கட்டுப்படுத்தி அமைதியான முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆள்பலத்தை பயன்படுத்தி முறைகேடு செய்வதை தடுக்க தேவையான அளவு பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவர். 50% வாக்கு சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணைய வழியில் நேரலை செய்யப்படும். எல்லைகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தேசிய, மாநில, மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும். சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.பொய்ச் செய்திகளை உருவாக்கி வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 7 கட்டங்களாக 2024 மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  'மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்,  மார்ச் 28 வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 30 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) வாக்கு எண்ணிக்கை என விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.