Kolkata got 2 players from Gujarat team

Advertisment

16 ஆவது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறவுள்ளது. அணியின் நிர்வாகங்கள் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை நவம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது.

இந்நிலையில் குஜராத் அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் லோகி ஃபெர்குசன் மற்றும் விக்கெட் கீப்பர் குர்பாஸையும் ட்ரேடிங் முறையில் கொல்கத்தா அணி வாங்கியுள்ளது. இத்தகவலை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத்தெரிவித்துள்ளது.

ஃபெர்குசன் கடந்த ஐபிஎல் ஏலத்தில் 10 கோடிக்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டார். கடந்த சீசனில் குஜராத் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். மேலும் குஜராத்தால் வாங்கப்படுவதற்கு முன்பு கொல்கத்தா அணிக்காக 2019 முதல் 2021 வரை விளையாடினார். தற்போது மீண்டும் கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டுள்ளார்.

Advertisment

ஹர்திக் பாண்டியா தலைமையில் அறிமுகமான குஜராத் அணிமுதல் வருடத்திலேயே கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.