Advertisment

கோலி ஓய்வு; நியூஸிலாந்து எதிரான தொடரில் முடிவு...

hgf nchgf n

இந்திய அணி நியூஸிலாந்துக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. நேற்று நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணித்தேர்வுக்குழு நியூஸிலாந்துக்கு எதிராக கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் அதனைத் தொடர்ந்த வரும் டி20 தொடர் ஆகியவற்றிற்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. அதன்படி கேப்டன் விராட் கோலியின் பணிச்சுமையை குறைப்பதற்காக, அவருக்கு கடைசி இரண்டு ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோலிக்கு மாற்று வீரர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் கோலிக்குப் பதிலாக ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்குப் பின் பிப்ரவரி 24 முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடரில் கோலி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

virat kohli indvsnz
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe