நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய பெங்களூர் அணி 205 ரன்கள் எடுத்து. இதனையடுத்து 206 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி ரஸ்ஸலின் அதிரடி ஆட்டத்தால் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூர் அணி இந்த சீசனில் தனது 5 வது தோல்வியை பதிவு செய்தது.

Advertisment

kohli slams rcb bowlers for their continuous loss

இதுவரை விளையாடிய எந்த போட்டிகளிலும் வெற்றி பெறாத நிலையில், இது குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் கோலி பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ளார். அபோது பேசிய அவர், "ரஸ்ஸல் போன்ற ஒரு பேட்ஸ்மேன் களத்தில் இருக்கும் போது பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையே இல்லாமல், பந்துவீச்சில் சொதப்பியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஐபிஎல் தொடருக்கான ஆட்டத்தை எங்கள் அணி வெளிப்படுத்தவில்லை என்பதே உண்மை. பந்து வீச்சில் இதே நிலைமை தொடர்ந்தால் நாம் தரவரிசையில் இப்போது இருக்கும் இடத்திலேயே கடைசிவரை இருக்க வேண்டியதுதான். கடினமான சூழ்நிலைகளை கையாள நாங்கள்பழக வேண்டும்" என கூறினார். தரவரிசையில் தற்போது கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூர் அணி வரும் 7 ஆம் தேதி டெல்லி அணியை எதிர்த்து விளையாட உள்ளது.