இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற தோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

Advertisment

kohli breaks dhonis test match record

தோனி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த போது 60 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றிகளைப் பதிவு செய்தார். தோனியின் இந்த சாதனையை கோலி வெறும் 48 போட்டிகளிலேயே முறியடித்துள்ளார். 48 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள கோலி 28 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் 60 போட்டிகளில் தோனி படைத்த சாதனையை 48 போட்டிகளிலேயே கோலி முறியடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கங்குலி 21 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

Advertisment