Skip to main content

கோலியும் ஷர்மாவும்தான்... அன்றே துல்லியமாக சொன்ன சச்சின்

Published on 18/10/2018 | Edited on 18/10/2018

2012-ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஒரு பேட்டியில் சச்சின் சாதனையை முறியடிக்க முடியுமா என்று சச்சினிடம் கேட்டிருந்தார்.  அதற்கு சர்வதேச போட்டிகளில் தனது சாதனையை ரோஹித்சர்மா மற்றும் விராட்கோலி ஆகியோரால் முறியடிக்க முடியும் என்று சச்சின் கூறி இருந்தார். 2012-ல் ரோஹித்சர்மா மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் வளர்ந்துவரும் இளம் வீரர்களாக இருந்தனர். இன்று இருவரும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக உள்ளனர். ஐ.சி.சி. ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடித்து அசத்தி வருகின்றனர் கோலியும் ரோஹித்தும். 

 

vv

 

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித்சர்மா இதுவரை 188 ஒருநாள் போட்டிகளில் 19 சதங்கள் உட்பட 7,065 ரன்கள் குவித்துள்ளார். 25 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள் 1,479 ரன்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு முக்கிய வீரராக இருந்து வருகிறார். 2011-ஆம் ஆண்டு வரை 72 போட்டிகளில் 1,810 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு 116 போட்டிகளுக்கு 5,255 ரன்கள் எடுத்துள்ளார்.  

 

ரோஹித்சர்மா கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் 50-க்கு மேல் சராசரி கொண்டு சாதனை படைத்துள்ளார். 2014-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். ஒருநாள் போட்டியில் 3 முறை 200 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர். 2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 209 ரன்களும், 2017-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 208* ரன்களும் எடுத்துள்ளார். 84 டி-20 போட்டிகளில் 3 சதங்கள் உள்பட 2,086 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணியில் 3 விதமான போட்டிகளிலும் சதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை உடையவர். 

 

vv

 

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்கள் உட்பட 6,286 ரன்கள் எடுத்துள்ளார். 211 ஒருநாள் போட்டிகளில் 35 சதங்கள் உள்பட 9,779 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு 40-க்கு மேல் சராசரியை கொண்டுள்ளார். 62 டி-20 போட்டிகளில் 2,102 ரன்கள் எடுத்துள்ளார். 2011-ஆம் ஆண்டு வரை 74 போட்டிகளில் 2,860 ரன்கள் எடுத்து இருந்தார். 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு 137 போட்டிகளில் 6,919  ரன்கள் எடுத்துள்ளார்.

 

vv

 

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 35 சதங்கள் அடித்து சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து வெளிநாடுகளில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை பெற்றார். குறைந்த ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்களை கடந்த வீரர் ஆவர். சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 10,000 மற்றும் 15,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். குறைந்த ஒருநாள் போட்டிகளில் 35 சதங்கள் அடித்த முதல் வீரர் ஆவர். ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை 2018-ஆம் ஆண்டு விராட் கோலி பெற்றார். 

 

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லியின் இன்றைய வளர்ச்சியை அன்றே சச்சின் கணித்தது அற்புதமான ஒன்று. ஏனெனில் 2012-ன் போது ரோஹித் சர்மா ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில்கூட விளையாடியது கிடையாது. விராட் கோலி 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். இருவரும் 70 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று இருந்தனர். அந்த கால கட்டத்திலேயே சச்சின் அவர்களை பற்றி துல்லியமாக கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.