kohli and anushka sharma playing cricket

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியின்கேப்டன் விராட்கோலி, அவரது மனைவி அனுஷ்காவுடன் மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகம் முழுவதும் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும், தொடர்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக விளையாட்டு வீரர்கள் அனைவரும் பெரும்பாலும் தங்களது குடும்பத்தாருடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, தனது மனைவி அனுஷ்காவுடன் மும்பையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ஓய்வு நேரத்தில்கோலி மற்றும் அனுஷ்காஇருவரும் வீட்டின் மாடியில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.